அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! இந்த 2020ம் ஆண்டு ஷஷ்டி திதியில், பூரட்டாதி நட்சத்திரத்தில், தனுசு லக்கனத்தில், புதன் கிழமை அன்று பிறக்கின்றது. இந்த ஆண்டு, சனிப் பெயர்ச்சி மற்றும் குருப் பெயர்ச்சி ஆகியவை நடைபெறுகின்றன. இவைகளால் உங்கள் ராசிக்கு ஏற்படும் பலன்களைப் பற்றியும், வழிபட வேண்டிய தெய்வங்களைப் பற்றியும் பார்ப்போம்.
சனீஸ்வரனை அதிபதியாகக் கொண்ட கும்ப ராசி அன்பர்களே! இந்த ஆண்டு உங்கள் ராசிக்கு என்ன பலன்கள் என்பதைப் பற்றிப் பார்ப்போம். உங்கள் ராசிக்கு 12ம் இடத்திற்கு, ஜனவரி 24ம் தேதி அன்று உங்கள் ராசியபதியான சனீஸ்வரன் பெயர்ச்சி அடைய உள்ளார். இரண்டாம் இடத்திற்கும், 11ம் இடத்திற்கும் அதிபதியான குரு பகவான் 11ம் இடத்தில், ஆட்சியில் இருக்கின்றார். ராகு பகவான் உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடத்தில் உள்ளார். இதனால், என்னப் பலன்களை நீங்கள் அடைவீர்கள் என்பது பற்றிப் பார்ப்போம்.
முதலில் ராசியதிபதியான சனி பகவான், உங்களுக்கு விரயாதிபதியும் ஆவர். அவர், இந்த ஆண்டு ஜனவரி மாதம் 24ம் தேதி நடைபெறுகின்ற சனிப் பெயர்ச்சியின் பொழுது, தனுசு ராசியில் இருந்து மகர ராசிக்குப் பெயர்ச்சி அடைகின்றார். இதனால், 12ம் இடம் வலுவடைகின்றது. மேலும், ராசியதிபதியான அவர், உங்கள் ராசிக்கு 12ம் இடத்தில் மறைகின்றார். இதனால், செலவுகளை கட்டுப்படுத்தவும். இல்லையென்றால், பண விரயத்தால், அவதிப் பட வேண்டி வரும்.
வருகின்ற இந்த ஜனவரி 24ம் தேதி நடைபெறும் சனிப் பெயர்ச்சியில் இருந்து, உங்களுக்கு ஏழரைச் சனி ஆரம்பமாகின்றது. இதனால், நீங்கள் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இரவு நேரப் பயணங்களைத் தவிர்க்கவும். அரசாங்க விஷயங்களை கவனமாகக் கையாளவும். முடிந்த வரை நேர்மையாக இருங்கள். வெளிநாட்டு விஷயங்கள் மூலம், வில்லங்கம் வரலாம். வெளிநாடு செல்ல நினைத்தவர்களுக்கு, நல்ல வேலை கிடைக்கும். குடும்ப விஷயங்களில், அமைதி காக்கவும். உங்கள் வீட்டு விஷயத்தினை வெளியாட்களிடம் கூற வேண்டாம். வருமானம் குறைவாகவே இருக்கும்.
கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். எதிரிகளின் தொல்லை இருக்காது. உடல்நலத்தில் கவனம் தேவை. தந்தையுடன் பிரச்சனைகள் வரலாம். புதிய சொத்துக்கள் மற்றும் நிலங்கள் போன்றவைகளை வாங்கும் பொழுது, உங்கள் சுய ஜாதகத்தினைப் பார்த்துக் கொள்வது நல்லது.
குரு பகவான் உங்கள் ராசிக்கு 11ம் இடத்தில், கேது பகவானுடன் இணைந்து, ஆட்சியில் இருக்கின்றார். இது ஒரு நல்ல அமைப்பு என்றுக் கூடக் கூறலாம். மூத்த சகோதரர்கள் உங்களுக்கு உறுதுணையாக இருப்பர். எதிலும், போராடி வெற்றிப் பெற்று விடுவீர்கள். திடீர் அதிர்ஷ்டங்களும் உருவாகும். குருவின் பார்வைப் பலனால், உங்கள் தைரியம் அதிகரிக்கும். சிறிய சிறியத் தடைகளுக்குப் பிறகு, உங்கள் முயற்சி வெற்றி அடையும். இளைய சகோதரர்கள் உங்கள் நிலைமையை புரிந்து கொண்டு நடப்பர்.
ராகு பகவான், உங்கள் ராசிக்கு ஐந்தில் இருக்கின்றார். எனவே, பெண் தெய்வ வழிபாட்டினை மேற்கொள்வது பலவித நன்மைகளைத் தரும். மேலும், குருவின் சுபப் பார்வையில் இருப்பதனால், அதிர்ஷ்டங்கள் தேடி வரும். ஒரு சிலர், பூர்விக சொத்தினை அடைவீர்கள். குருவின் பார்வைப் பலனால், இதுவரை தடைபட்டு வந்த குழந்தைப் பாக்கியம், ஜனவரி மாதத்திற்குப் பிறகு கிடைக்கும். திருமணத்திற்காக காத்திருந்தவர்களுக்கு அழகிய வரன்கள் அமையும். வெளியுலகத் தொடர்பு சிறப்படையும். ஒப்பந்ததாரர்கள் நட்புக்கரம் நீட்டுவர். உடன்பணிபுரியும் ஊழியர்கள் பல உதவிகளை செய்வர். இதனால், தொழிலில் நிலவும் நெருக்கடிகளை சமாளிப்பீர்கள்.
இந்த ஆண்டின் மத்தியப் பகுதியில், குரு பகவான் அதிசாரமாக மகர ராசிக்குச் செல்கின்றார். அங்கு சனி பகவானுடன் இணைகின்றார். இதனால், தாயின் மூலம் பல நன்மைகள் நடைபெறும். கல்வி சிறப்படையும். தேர்வுகளில் வெற்றிப் பெறுவீர்கள். எதிர்பார்த்த மதிப்பெண்கள் தேர்வில் கிடைக்கும். போட்டித் தேர்வுகளிலும் வெற்றிக் கிடைக்கும். உடல்நிலை இந்தக் காலக் கட்டத்தில் நன்றாக இருக்கும். அடி வயிற்றில் வலி முதலானவை உருவாகலாம். இரவு நேரப் பயணங்களை இந்த காலக் கட்டத்தில் தவிர்த்தல் நல்லது. மீண்டும், ஆண்டின் பிற்பகுதியில் தனுசு ராசிக்கே பெயர்ச்சி அடைகின்றார்.
இந்த அமைப்பினால், தொழிலில் நிலவி வந்த தடைகள் அகலும். வருமானம் சுமாராகவே இருக்கும். தொழிலை விரிவுபடுத்த நினைத்து, கடன் வாங்க வேண்டாம். பின்னர், அதுவே தலைவலியாக மாறிவிடும். ஒப்பந்தங்களில் கையெழுத்திடும் பொழுது எச்சரிக்கைத் தேவை.
ஆக மொத்தம் இந்த ஆண்டு, உங்கள் கும்ப ராசிக்கு நூற்றுக்கு 71% நன்மைகளே நடக்க உள்ளன. மேலும் பல நன்மைகள் நடக்க, தெருவில் வாழ்பவர்களுக்கு, உடைகள், குடை, உணவு முதலானவைகளை வாங்கித் தாருங்கள். சிவ வழிபாடு நன்மை அளிக்கும். மறக்காமல் குல தெய்வ வழிபாட்டினை மேற்கொள்ளவும்.