புத்தாண்டு ராசி பலன்கள் 2020! கன்னி

24 October 2020 ராசிபலன்
kanni.jpg

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்! இந்த 2020ம் ஆண்டு ஷஷ்டி திதியில், பூரட்டாதி நட்சத்திரத்தில், தனுசு லக்கனத்தில், புதன் கிழமை அன்று பிறக்கின்றது. இந்த ஆண்டு, சனிப் பெயர்ச்சி மற்றும் குருப் பெயர்ச்சி ஆகியவை நடைபெறுகின்றன. இவைகளால் உங்கள் ராசிக்கு ஏற்படும் பலன்களைப் பற்றியும், வழிபட வேண்டிய தெய்வங்களைப் பற்றியும் பார்ப்போம்.

புத பகவானை அதிபதியாகக் கொண்ட கன்னி ராசி அன்பர்களே, இந்த ஆண்டு உங்கள் ராசிக்குப் பலவித நன்மைகள் நடக்கும். கடந்த ஆண்டினை காட்டிலும், இந்த ஆண்டு மிக நன்றாகவே இருக்கும். சனி பகவான் பெயர்ச்சியால், நீங்கள் பல நன்மைகளை அடைய உள்ளீர்கள்.

உங்கள் ராசிக்கு 10ம் இடத்தில், ராகு பகவான் சுப பலத்தில், குரு பகவானின் பார்வையில் இந்த ஆண்டு முழுக்க இருக்க உள்ளார். இதனால், தொழிலில் இருந்து வரும் தடைகள், பிரச்சனைகள் போன்றவை அனைத்துமே, வருகின்ற ஜனவரி 24க்குப் பின் மாறும். தொழில் வளர்ச்சியினால், உங்களுடைய அந்தஸ்து அதிகரிக்கும். தொழிலை விரிவுபடுத்தும் வாய்ப்புகளும் உண்டாகும். மன மகிழ்ச்சியால் உங்கள் குடும்பத்தினரையும் மகிழ்ச்சியாக வைத்திருப்பீர்கள்.

ராகுவின் பார்வையின் காரணமாக, தூங்கம் பொழுது தொந்தரவுகள் ஏற்படும். சிவ வழிபாட்டினை மேற்கொள்ளவும். வெளிநாடு செல்ல நினைப்பவர்களுக்கு, இந்த ஆண்டு நல்ல வாய்ப்புகள் கிடைக்கும். இதுவரை, அடைபடாமல் இருந்து வந்த கடன்களை நீங்கள் எளிதாக அடைக்கும் பாக்கியம் உண்டாகும்.

குரு பகவான், உங்கள் ராசிக்கு நான்காம் இடத்தில் இருக்கின்றார். அவர் ஆட்சியில் இருக்கின்றார். இதனால், நல்லப் பலன்களையே உங்களுக்கு வழங்குவார். உங்கள் தாயுடன் இருந்து வந்த கருத்து மோதல்கள் நீங்கும். அவருடன் இருந்துப் பிரச்சனைகள் முடிவுக்கு வந்து, புதியப் பொருட்களை வாங்குவீர்கள். தாயின் மூலம் ஒரு சிலருக்கு ஆதாயம் உண்டாகும். தாயின் மூலம் பொருள் சேர்க்கை ஏற்படும். புதிய படிப்பினை ஒரு சிலர் ஆரம்பிப்பர். படிப்பில் நல்ல வளர்ச்சி உண்டாகும்.

ஆன்மீகம் சம்பந்தப்பட்ட தேடல்களுக்கு இந்த ஆண்டு, நல்லதொரு விடை கிடைக்கும். குரு பகவான் உங்கள் ராசிக்கு எட்டாம் இடத்தினைப் பார்க்கின்றார். இதனால், உடல்நிலை சீராகும். நீண்ட நாட்களாக இருந்து வந்த கடன் பிரச்சனை நீங்கும். நீங்கள் கேட்ட இடத்தில், உங்களுக்குக் கடன் கிடைக்கும். கணவன் மற்றும் மனைவியின் இடையே, அந்நியோன்யம் அதிகரிக்கும். உடல் எடை அதிகரிப்பு, தொப்பை முதலானவை ஏற்படலாம். எனவே, தொடர்ந்து உடற்பயிற்சி செய்யவும். குரு பகவானின் ஏழாம் பார்வையானது, உங்கள் ராசிக்கு 10ம் இடத்தின் மீது விழுகின்றது.

இதனால், ஜனவரி 24க்குப் பின், தொழிலில் அபரித வளர்ச்சியினை நீங்கள் சந்திப்பீர்கள். தொழிலில் இருந்து வந்த தொய்வு நிலை நீங்கும். புதியத் தொழில் தொடங்கும் வாய்ப்புகளும் உண்டாகும். சொந்தத் தொழில் செய்பவர்கள், செய்யும் தொழிலினை விரிவுபடுத்துவீர்கள். வேலைத் தேடி அலைந்தவர்களுக்கு நல்ல வேலைக் கிடைக்கும். சுபச் செலவுகள் ஏற்படலாம்.

குருவின் 9ம் பார்வையானது, உங்கள் ராசிக்கு 12ம் இடத்தில் விழுகின்றது. இதனால், நிம்மதியான தூக்கம் கிடைக்கும். வெளிநாடு மூலம் நல்ல வளர்ச்சி உண்டாகும். வெளிநாட்டுத் தொடர்புகள் சிறப்படையும். ஆன்லைன் வர்த்தகம் அருமையாக இருக்கும். சனி பகவான், உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடத்திற்கு, ஜனவரி 24ம் தேதி அன்று பெயர்ச்சி அடைகின்றார். இதனால், நீண்ட நாட்களாக குழந்தைப் பிறப்பிற்காக காத்திருந்தவர்களுக்கு, சற்றுத் தாமதத்திற்குப் பின் நல்ல அழகிய குழந்தைகள் பிறக்கும்.

கடுமையாக உழைத்தாலும், உழைப்பிற்கேற்ற வருமானம் ஏற்படாத சூழ்நிலை உருவாகலாம். மூத்த சகோதரர்களுடன் உரசல்கள் ஏற்படலாம். எனவே, சற்று விட்டுக் கொடுத்துச் செல்லவும். உங்களுடைய இரண்டாவது கணவன் அல்லது மனைவியுடன், சண்டைகள் மற்றும் பிரச்சனைகள் ஏற்படலாம். குடும்பத்தில் அமைதியாக நடந்து கொள்ளவும். பேசும் பொழுது எச்சரிக்கைத் தேவை.

ஆக மொத்தம் இந்த 2020ம் ஆண்டு, உங்கள் கன்னி ராசிக்கு நூற்றுக்கு 87% நன்மைகளே நடக்கும். மேலும் பல நன்மைகள் நடக்க, சக்தி வழிபாட்டினை மேற்கொள்ளவும். பெருமாளையும், குல தெய்வத்தையும் மறக்காமல் தொடர்ந்து வணங்கி வரவும்.