மிதுனம் ராசியின் பலம் மற்றும் பலவீனம்! அதிர்ஷ்டக் குறிப்புகள்!

24 October 2019 ஜோதிடம்
mithunam.jpg

புத பகவானை அதிபதியாக, கொண்டது தான் இந்த மிதுன ராசி. இந்த ராசிக்காரர்கள் இயல்பாகவே ஆணாக இருந்தால் பெண்களிடமும், பெண்ணாக இருந்தால் ஆண்களிடமும் ஒட்டிக் கொள்வார்கள். இவர்கள் மிகவும், அன்பானவர்கள், எதையும் ஏற்றுக் கொள்ளும் சுபாவம் உள்ளவர்கள், பாசமிக்கவர்கள் ஆவர். இவர்கள் இருக்கும் இடத்தில், உங்களுக்குப் பிடித்த நபர் யார் என்று கூறக் கூறினால், இவர்களுக்கே மற்றவர்கள் முன்னுரிமை வழங்குவர்.

சரி இந்த மிதுன ராசிக்காரர்களின் பலவீனம் என்ன தெரியுமா? இந்த மிதுன ராசிக்காரர்கள், சோசியல் மீடியா அடிமைகள். ஆம், இந்த மிதுன ராசிக்காரர்கள், பேஸ்புக், டிவிட்டர், இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலை தளங்களிலேயே ஒரு அர்த்தமுமில்லாமல், தன்னுடைய காலத்தைக் கழிப்பர். இவர்களுக்கு காலை விடியலும், சோசியல் மீடியாவில் தான். இரவு உறக்கமும் சோசியல் மீடியாவில் தான். பேஸ்புக்கில், குட் நைட் என ஸ்டேட்டஸ் போட்டுவிட்டு, தூங்கச் செல்வோர் இந்த மிதுன ராசி மக்களே!

மிதுன ராசிக்காரர்களின் நல்வாழ்விற்கான அதிர்ஷ்ட குறிப்புகள்!

1.படிகாரத் தூள் கொண்டு அல்லது படிகாரத் தூள் சேர்த்த, பற்பொடி அல்லது பற்பசை கொண்டு பல் துலக்குவது, அதிர்ஷ்டம் தரும்.

2.முடிந்த போது, மீனுக்குப் பொரி அல்லது இரை போடுவது, நன்மை பயக்கும்.

3.புனித யாத்திரை ஸ்தலங்களுக்கு, பால் மற்றும் அரிசி ஆகியவற்றை தானமாக வழங்கலாம்.

4.உங்கள் பொருளாதார நிலைக்கு ஏற்றவாறு, வறுமையில் உள்ள நோயாளிகளுக்கு, மருந்துப் பொருட்கள் வாங்கித் தரலாம்.

5. 12 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளை, திட்டக் கூடாது. அவர்களை புதன் கிழமை அன்று வணங்கி ஆசி பெறுவது, நன்மை தரும்.

6.பச்சை நிற ஆடைகள் அணியக் கூடாது. துரதிர்ஷ்டம் உண்டாக்கும்.

7.வீட்டில், மணி பிளான்ட் வளர்க்கக் கூடாது.

8.பச்சை நிறப் பாட்டிலில் கங்கை நீர் நிரப்பி, அந்த பாட்டிலை இறுக்கமாக மூடி விடவும். ஒரு வயலில் கொஞ்சம் நெருப்பு மூட்டி, அதில் அந்த பாட்டிலைப் போட்டு விட துரதிர்ஷ்டங்கள் நீங்கும்.

இந்த எளிய வழிகளைப் பின்பற்றுவதன் மூலம், வாழ்க்கையில் எளிதாக அதிர்ஷ்டத்தை அடைய இயலும்.