மேஷம் ராசியின் பலம் மற்றும் பலவீனம்! அதிர்ஷ்டக் குறிப்புகள்!

24 October 2019 ஜோதிடம்
mesham.jpg

இந்த ராசியின் அதிபதி, செவ்வாய் பகவான் ஆவார். இவர்கள் மிகவும் உற்சாகமானவர்கள். இவர்கள் இருக்கும் இடத்தையும், மிக உற்சாகமாக, சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ளவே விரும்புவர். மேலும், இவர்கள் தன்னை சுற்றியுள்ள நபர்களையும், உற்சாகமாக மாற்றிவிடுவார்கள்.

இவர்களுடையப் பலவீனம் என்னத் தெரியுமா? கோபம். ஆம், இவர்களுக்குக் கோபம் வந்தால், ஒன்று வாய் கிழியக் கத்துவார்கள். அல்லது, வாயைத் திறக்கவே மாட்டார்கள். அதே போல், முக்கியமான பலவீனங்களும் உண்டு. அது என்ன தெரியுமா? காபி சாப்பிடுவது. இவர்கள் காபி பிரியர்கள். காலை முதல் மாலை வரை அதிக அளவில் காபி பருகுவர்.

அதே போல், இவர்கள் சாகச விரும்பிகள். மலைகளில் ஏறுவது, கடலில் நீச்சல் அடிக்க விரும்புவது, விபரீத விளையாட்டுகளில் விருப்பம் ஆகியவை இவர்களின் மிக முக்கியப் பலவீனம் ஆகும்.

மேஷ ராசிக்காரர்களின் நல்வாழ்விற்கான அதிர்ஷ்ட குறிப்புகள்!

1.எந்தப் பொருளையும் இலவசமாக வாங்கதீர்கள். ஒரு சிறு தொகையாவது கொடுத்தே வாங்குங்கள்.

2.சிகப்பு நிற கர்ச்சிப் பயன்படுத்துவது அதிர்ஷ்டமாகும்.

3.பின்னமில்லாத, டிசைன் இல்லாத வெள்ளிக் காப்பை ஆண்கள் வலது கையில் அணிந்து கொள்ள, வாழ்வில் நன்மைகள் பெருகும். பெண்கள் வெள்ளியில் செய்த, வளையல் அல்லது கங்கணம் அணியலாம்.

4.ஸ்வீட் அல்லது மிட்டாய் செய்பவராக, ஸ்வீட் ஸ்டால் அல்லது மிட்டாய் கடையில் வேலை செய்யக் கூடாது. இது அதிர்ஷ்டத்தைக் கெடுக்கும்.

5.வீட்டில் எலுமிச்சை செடி அல்லது மரம் வளர்க்கக் கூடாது.

6.தாய், குரு மற்றும் ஆன்மீகப் பெரியவர்கள், ஞானிகளுக்கு தங்களால் முடிந்த சேவையை செய்தல் வேண்டும். உண்மையான குருக்களைக் கண்டுபிடித்துச் செய்யவும்.

7.உறங்கும் பொழுது, தலைமாட்டில் ஒரு செம்பு நிறைய நீர் நிரப்பி வைத்துக் கொள்ளவும். அந்த நீரைக் காலையில் எழுந்ததும், ஏதேனும் செடிக்கு ஊற்றி வரவும்.

இந்த எளிய வழிகளைப் பின்பற்றுவதன் மூலம், வாழ்க்கையில் எளிதாக அதிர்ஷ்டத்தை அடைய இயலும்.