மீனம் ராசியின் பலம் மற்றும் பலவீனம்! அதிர்ஷ்டக் குறிப்புகள்!

24 October 2019 ஜோதிடம்
meenam.jpg

இந்த ராசியின் அதிபதி, குரு பகவான் ஆவார். இவர்கள், அமைதியானவர்கள், அன்பானவர்கள், ஒழுக்கமானவர்கள் மற்றும் சற்று சுர்ரென்று இருப்பவர்கள். இவர்களுக்குப் பொதுவாக, நவக்கிரகங்களின் பாதிப்புகள் இருக்காது.

இவர்களுக்கு, நல்ல உணவு கொடுத்தால், நீங்கள் தான் தெய்வம். டிவியில் நல்ல நாடகங்களை விரும்பிப் பார்ப்பர். அதே சமயம், இவர்களுக்கு மிகவும் பிடித்த விஷயம் என்ன தெரியுமா? உறங்குவது.

இவர்களை போல், உறங்குபவர்கள் இவ்வுலகில் யாரும் இல்லை. இவர்களுக்கு இந்த உறக்கம் மட்டுமே நல்ல மருந்தும் கூட. இந்த ராசிக்காரர்களை போல், மற்ற எந்த ராசிக்காரர்களும் உறக்கத்தைக் காதல் செய்ய முடியாது.

ஆனால், தூக்கம் தூக்கம் என்று நேரத்தை மட்டுமல்லாமல், வாழ்க்கையையும் கழிப்பர். இதனால், சோம்பேறி என்ற பெயரினை எடுப்பர்.

மீன ராசிக்காரர்களின் நல்வாழ்விற்கான அதிர்ஷ்ட குறிப்புகள்!

1.சட்டையின் உள் பாக்கெட்டில், சிகப்பு நிற ஸ்வஸ்திக் படம் வைத்துக் கொள்ளவும்.

2.பிறர் முன்னால், குளிக்கக் கூடாது.

3.மொட்டை போட்டால், முழுக்க மொட்டை அடிக்காமல், கொஞ்சம் பிடரியில் குடுமி வைத்துக் கொள்ளவும்.

4.ஆலயங்களில் உணவு பிராசதம் அளிப்பதை விட, ஆடைகள் தானமாக அளிப்பதே சிறப்பு.

5.வீட்டில் துளசி வளர்க்கக் கூடாது.

6.வீட்டின் வழிபாட்டு அறையை, சுத்தமாக வைத்துக் கொள்ளவும். ஆலயத்தைத் தூய்மைப்படுத்தும் பணியிலும், கலந்து கொள்வது நல்லது.

7.அரசமரத்தை நடுவது மற்றும் வழிபாடு நன்மை பயக்கும்.

8. யாரிடம் இருந்தும், தானமாக எதையும் பெறக் கூடாது.

9.வீட்டின் முன்புறம், கழிவு நீர் தேங்காமல் பார்த்துக் கொள்ளவும்.

10.தொழில் சார்ந்த முடிவுகளில், மனைவியைக் கலந்தாலோசித்து முடிவெடுப்பது, நல்லது.

11.பணப்பெட்டி அல்லது பீரோவில், தங்கக் கட்டி அல்லது தங்க நாணயத்தை மஞ்சள் துணியில் முடிந்து வைக்க, செல்வம் பெருகும்.

12.கோழிக் குஞ்சுகளுக்கு இரை போடுதல் நன்மை பயக்கும்.

13.குருமார்களுடன் தொடர்ந்து தொடர்பில் இருத்தல் நன்று.

இந்த எளிய வழிகளைப் பின்பற்றுவதன் மூலம், வாழ்க்கையில் எளிதாக அதிர்ஷ்டத்தை அடைய இயலும்.