மீனாட்சி அம்மன் கோவிலில் லட்டு!

24 October 2019 கோவில்கள்
meenakshi-sundareswarar.jpg

நாளை தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, மீனாட்சி அம்மன் கோவிலில் லட்டு வழங்கப்பட உள்ளது.

ஏற்கனவே அறிவித்தபடி, மீனாட்சி அம்மன் கோவிலில் பக்தர்களுக்கு இலவச லட்டு வழங்கப்பட உள்ளதாக, அறிவித்து இருந்தது. இந்நிலையில், மீனாட்சி அம்மன் கோவிலுக்குள், பெரிய ராட்சத அடுப்புகளை அமைக்க தீயணைப்புத் துறை அனுமதி வழங்கவில்லை. இதன் காரணமாக, பெரிய அளவிலான, அடுப்புகளை வைக்க இயலாத நிலை நிலவி வருகின்றது.

இந்நிலையில், பக்தர்களுக்கு ஒரு லட்டு வீதம் சுமார் 12,000 லட்டுக்களை வழங்க முடிவு செய்யப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முதலில் 20,000 லட்டுக்கள் தயாரிக்கத் திட்டமிடப்பட்டிருந்த நிலையில், தீயணைப்புத் துறையின் கட்டுப்பாடுகளின் காரணமாக, லட்டுகளை தயாரிக்கும் அடுப்புகளின் எணிக்கைக் குறைக்கப்பட்டுள்ளது. இதனால், 12,000 லட்டுகள் மட்டுமே தயாரிக்கப்பட உள்ளது.

இது நாளை முதல், மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு வழங்கப்பட உள்ளதாக கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.