மீனாட்சி கல்யாண வைபோகமே! மதுரையில் கொண்டாட்டம்!

24 October 2019 கோவில்கள்
meenakshi-sundareswarar.jpg

சித்திரைத் திருவிழாவின் பத்தாம் நாளான இன்று, மதுரையின் அரசனாக வாழும் சுந்தரேஷ்வரர் மற்றும் மதுரையின் அரசி மீனாட்சிக்கும் இன்று திருமண வைபவம் நடைபெற்றது.

பார்வதியின் மற்றொரு அவதாரமான, மதுரையை ஆண்ட மீனாட்சிக்கும், சுந்தரேஷவரராக அவதாரம் எடுத்த சிவபெருமானுக்கும் இடையே இன்று காலை திருமணம் நடைபெற்றது. இந்த விழா ஒவ்வொரு வருடமும், மதுரையில் நடைபெற்று வருகிறது.

குலசேகர வகையராவைச் சேர்ந்த, கற்பூரம் என்ற பட்டர் சொக்கநாதராகவும், உக்கிரபாண்டி வகையராவைச் சேர்ந்த, ஹாலாசி நாதப்பட்டர் மீனாட்சியாகவும் இன்று சொக்கநாதராகவும், மீனாட்சியாகவும் காட்சியளித்தனர்.

அண்ணன் விஷ்ணுவின் முன்னிலையில், மீனாட்சிக்கும் சொக்கநாதருக்கும், திருமணம் நடைபெற்றது. இரண்டு பட்டர்களும், சுந்தரேஷ்வரராகவும், மீனாட்சியாகவும் மாலை மாற்றிக் கொண்டனர்.

இதனைத் தொடர்ந்து இன்று மாலை, பூப்பல்லாக்கும் உற்சவமும், நாளை உலகப் பிரசித்திப் பெற்ற தேரோட்டமும் நடைபெற உள்ளது. நாளை மாலை சித்திரை திருவிழாவின் முக்கிய விழாவான அழகரின் எதிர்சேவை நடைபெற உள்ளது. இதற்காக, அழகர் மலையில் உள்ள அழகர் கோவிலில் இருந்து, அழகரின் தங்கக்குதிரை மதுரை வந்தடைந்தது.

நாளை மறுநாள் அழகர் பெருமான், மதுரையில் உள்ள வைகை ஆற்றில் எழுந்தருள உள்ளார்.