மகரம் ராசியின் பலம் மற்றும் பலவீனம்! அதிர்ஷ்டக் குறிப்புகள்!

24 October 2019 ஜோதிடம்
magaram.jpg

இந்த ராசியின் அதிபதி, சனீஸ்வரன் ஆவார். இந்த ராசிக்காரர்கள் தான் இருக்கின்ற 12 ராசிகளிலேயே, மிக ஒழுக்கமான மற்றும் பொறுப்பான ராசிக்காரர்கள் ஆவர். இவர்களுக்குப் பிடித்த வேலைக் கிடைப்பதில், பெரிய அளவில் பிரச்சனைகள் இருக்காது. இவர்களுடையப் பொழுது போக்கே, இவர்கள் செய்யும் வேலை தான். இவர்களுக்குப் பிடித்தது வேலை தான். இதிலிருந்தே இந்த ராசிக்காரர்களைப் பற்றி நாம் தெரிந்து கொள்ளலாம்.

இவர்களுக்கு தொடர்ந்து வேலைப் பார்ப்பது பிடிக்கும். ஆகவே, வாழ்வில் மெல்ல, மெல்ல நல்ல உயரத்தை அடையாமல் இருக்கமாட்டர்கள். இவர்களுக்கு அடுத்தவருடன் போட்டிப் போடுவதுப் பிடிக்காது. மாறாக, இவர்கள், இவர்களுடையேப் போட்டிப் போட்டு முன்னேறுவர்.

இவர்களுடைய பலவீனம் ஓய்வு. இவர்கள் ஓய்வில்லாமல், உழைப்பவர்கள் ஆதலால், இவர்களுடைய மனம், விரைவில் விரக்தி அடைந்து விடும். இதற்காக, இவர்கள் தியானம், மற்றும் நல்ல உறக்கம் ஆகியவற்றை எடுத்தாலே விரைவாக புத்துணர்ச்சி அடைந்து விடுவர்.

மகர ராசிக்காரர்களின் நல்வாழ்விற்கான அதிர்ஷ்ட குறிப்புகள்!

1.சாப்பாட்டுக்கே கஷ்டப்படும் ஏழைகள், பிச்சைக் காரர்களுக்கு வாழைப்பழம், பருப்பு, ஸ்வீட் தானம் செய்ய விபத்துக்கள், எதிர்பாராத ஆபத்துக்களில் இருந்து காக்கும்.

2.ஆண் / பெண் யாராக இருந்தாலும், கணவன் அல்லது மனைவி தவிர்த்த பிறருடன், தவறான தொடர்பு கொள்ளவோ அல்லது அதற்காக முயற்சிக்கவோ கூடாது. இது பிற்கால வாழ்வில், கொடிய தரித்திரத்தை உண்டாக்கும்.

3.பாலும் சீனியும் கலந்து, ஆல மர வேரில் விடவும். அதில் இருந்து மண் எடுத்து நெற்றியில் இட்டுக் கொள்ள, செல்வ வளம் நிறைந்த வாழ்வு கிட்டும்.

4. கேது கிரகத்திற்கு சாந்தி செய்து கொள்ளவும்.

5.48 வயதுக்கு பின், வீடு கட்டுவது நல்லது. அதற்கு முன் வீடு கட்டுவது, அதிர்ஷ்டமல்ல.

6.கருப்பு, நீலம் மற்றும் ரோஸ் நிற ஆடைகளைத் தவிர்க்கவும்.

7.ஏதேனும் ஒரு சனிக்கிழமை, கொஞ்சம் பால் மற்றும் ஒரு வெள்ளி நாணயத்தை, கிணற்றில் போடவும். இது துரதிர்ஷ்டத்தை நீக்கி, வாழ்வில் வளம் சேர்க்கும்.

8.கிழக்கு நோக்கிய வாசல் உள்ள வீடு அதிர்ஷ்டமானது

இந்த எளிய வழிகளைப் பின்பற்றுவதன் மூலம், வாழ்க்கையில் எளிதாக அதிர்ஷ்டத்தை அடைய இயலும்.