ஒவ்வொரு ராசிக்கும் ஒவ்வொரு நிறம் உள்ளது. அது போல, ஒவ்வொரு நவக்கிரகத்திற்கும் ஒரு சில குறிப்பிட்ட நிறத்தை, நம் ஜோதிட முன்னோர்கள் குறிப்பிட்டுள்ளனர். அதனைப் பயன்படுத்தி, அந்தக் கிரகத்தின் ஆசிர்வாதத்தையும், ஆதரவையும் நம்மால் பெற முடியும் என, ஜோதிடர்கள் கருதுகின்றனர். அப்படிப்பட்ட நிறங்கள் என்னென்ன என்பதையும், எந்த லக்னம் மற்றும் ராசிக்கு, எந்த நிறம் நன்மை அளிக்கும் என்பதைப் பற்றியும் பார்ப்போம்.
மேஷ லக்னம் மற்றும் ராசியின் அதிபதி செவ்வாய் பகவான் ஆவார். இவர் சிவப்பு நிறத்திற்குச் சொந்தக்காரர். எனவே இந்த ராசிக்காரர்கள் சிவப்பு நிறத்தை பயன்படுத்தலாம். இது முதல் தரமான, அதிர்ஷ்டத்தை உங்களுக்கு அளிக்கும். சிவப்பு நிறத்தைத் தொடர்ந்து, ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
சுக்கிரனின் ஆதிக்கத்தில் உள்ள ராசி ரிஷப ராசி ஆகும். இந்த ராசி மற்றும் லக்னத்தில் பிறந்தவர்கள் வெள்ளை, நீலம் மற்றும் பச்சை நிறத்தைப் பயன்படுத்த அதிர்ஷ்டம் அதிகரிக்கும்.
புதனின் ஆதிக்கத்தில் உள்ள மிதுன ராசி மற்றும் லக்னத்தைச் சேர்ந்தவர்கள், பச்சை, வெள்ளை மற்றும் நீல நிறத்தைப் பயன்படுத்தினால், அதிர்ஷ்டம் பெருகும்.
சந்திரனின் ஆதிக்கத்தில் உள்ளது இந்த கடகம். கடக ராசி மற்றும் லக்னத்தில் பிறந்தவர்கள், மங்கிய வெண்மை, சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தைப் பயன்படுத்த அதிர்ஷ்டம் பெருகும்.
சூரியனின் ராசியாக இந்த சிம்ம ராசி உள்ளது. இந்த சிம்ம ராசி மற்றும் லக்னத்தைச் சேர்ந்தவர்கள், மங்கிய வெண்மை, மஞ்சள் மற்றும் வெளிர் ஆரஞ்சு நிறத்தைப் பயன்படுத்த அதிர்ஷ்டம் உண்டாகும்.
புதனின் ஆதிக்கத்தில் உள்ள கன்னி ராசி மற்றும் லக்னத்தைச் சேர்ந்தவர்கள், பச்சை, வெள்ளை மற்றும் நீல நிறத்தைப் பயன்படுத்தினால், அதிர்ஷ்டம் பெருகும்.
சுக்கிரனின் ஆதிக்கத்தில் உள்ள ராசி துலாம் ராசி ஆகும். இந்த ராசி மற்றும் லக்னத்தில் பிறந்தவர்கள் வெள்ளை, நீலம் மற்றும் பச்சை நிறத்தைப் பயன்படுத்த அதிர்ஷ்டம் அதிகரிக்கும்.
விருச்சிக லக்னம் மற்றும் ராசியின் அதிபதி செவ்வாய் பகவான் ஆவார். இந்த ராசிக்காரர்கள் சிவப்பு, ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
தனுசு லக்னம் மற்றும் ராசியின் அதிபதி குரு பகவான் ஆவார். இந்த ராசிக்காரர்கள் தங்க நிறம், சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மகர லக்னம் மற்றும் ராசியின் அதிபதி சனி பகவான் ஆவார். இந்த ராசிக்காரர்கள் கரு நீலம், வெண்மை மற்றும் பச்சை நிறத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
கும்ப லக்னம் மற்றும் ராசியின் அதிபதி சனி பகவான் ஆவார். இந்த ராசிக்காரர்கள் கரு நீலம், வெண்மை மற்றும் பச்சை நிறத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
மீனம் லக்னம் மற்றும் ராசியின் அதிபதி குரு பகவான் ஆவார். இந்த ராசிக்காரர்கள் தங்க நிறம், சிவப்பு மற்றும் ஆரஞ்சு நிறத்தைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.