கும்பம் ராசியின் பலம் மற்றும் பலவீனம்! அதிர்ஷ்டக் குறிப்புகள்!

24 October 2019 ஜோதிடம்
kumbam.jpg

இந்த ராசியின் அதிபதி, சனீஸ்வரன் ஆவார். இந்த ராசியினர், மிகவும் சுதந்திரமாக இருக்க விரும்பும் மனிதர்கள். இவர்களை கட்டுப்படுத்துவது, இவர்களுக்குப் பிடிக்காது. இவர்களுக்கு பேண்டஸி கதைகள், இதிகாச கதாப்பாத்திரங்கள் மீது அலாதி பிரியம் இருக்கும்.

இவர்களுக்கு எதாவதுப் பெரிய பிரச்சனை என்றால், அதனைப் பற்றிக் கண்டு கொள்ளமாட்டார்கள். அந்த நேரத்தில், பாட்டு கேட்டல், படம் பார்த்தல், புத்தகம் படித்தல் என மனதை அமைதியாக்கிவிடுவார்கள். பின்னர், பிரச்சனையை பற்றி யோசித்து, வெற்றிகரமாக அந்தப் பிரச்சனையில் இருந்து மீள்வர்.

இவர்களுடைய பிரச்சனையும் இது தான். இவர்கள் மிகவும் அசால்ட்டாக இருப்பார்கள். இதன் காரணமாக, பிரச்சனை முற்றிய சமயங்களில் ஒரு சில நேரம் விழிபிதுங்கியும் இருப்பார்கள். மனதிற்கு தோன்றினாலும், இவர்கள் அதனைப் பற்றிக் கவலைப்படாமல் இருப்பதனால், கடைசி நேரத்தில் சற்று வருத்தப்படவும் செய்வர்.

கும்ப ராசிக்காரர்களின் நல்வாழ்விற்கான அதிர்ஷ்ட குறிப்புகள்!

1.கையிலோ அல்லது கழுத்திலோ, தங்க நகை அணிவது அதிர்ஷ்டம் தரும்.

2.குங்குமப்பூ அரைத்துக் குழைத்து, நெற்றியில் திலகம் இட்டு வர, நிறைந்த செல்வத்துடன் வாழலாம்.

3.மாதம் ஒரு முறை குளிக்கும் நீரில், கொஞ்சம் பால் கலந்து குளித்து வந்தால், பீடைகள் நீங்கும்.

4.சதுர வடிவமான வெள்ளி டாலரை, நூல் அல்லது செயினில் கோர்த்துக் கழுத்தில் அணிந்தால், வேலை அல்லது தொழிலில் உயர்ந்த நிலை கிட்டும்.

5.வெள்ளியை உருக்கி, 4 சிறு உருண்டைகளாகச் செய்து, அதை ஒரு பேப்பர் அல்லது கவரில் போட்டு சட்டைப் பையில் வைத்திருந்தால், செல்வம் பெருகும்.

6.ஏழைகளுக்கோ அல்லது கோவில்களுக்கோ, எண்ணெய் தானம் செய்யலாம்.

7.ஞாயிற்றுக்கிழமை அன்று, பைரவருக்கு மது படைக்கலாம். ஆனால் அதை அருந்தக் கூடாது.

8.வீட்டின் மேல்பகுதி அல்லது மொட்டை மாடியில், பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற எரிபொருட்களை, வைக்கக் கூடாது.

9.விரதம் இருப்பதாக இருந்தால், சனிக்கிழமை இருக்கவும்.

10.மது மாமிசம் உண்பதைத் தவிர்க்கவும்.

இந்த எளிய வழிகளைப் பின்பற்றுவதன் மூலம், வாழ்க்கையில் எளிதாக அதிர்ஷ்டத்தை அடைய இயலும்.