கன்னி ராசியின் பலம் மற்றும் பலவீனம்! அதிர்ஷ்டக் குறிப்புகள்!

24 October 2019 ஜோதிடம்
kanni.jpg

இதன் அதிபதி, புத பகவான் ஆவார். இவர்களே இந்த உலகின் மிகவும் யாதார்த்தவாதிகள். இது தான் நடக்கும், இது நடக்க வாய்ப்பில்லை, இதுலாம் சினிமால மட்டும் தான் சாத்யம் என்று பேசுவார்கள். அவ்வாறே வாழவும் செய்வார்கள். நல்ல உழைப்பாளிகள். எதில் வெற்றிக் கிடைக்குமோ, அதில் மட்டுமே ஈடுபடுவர்.

அதே சமயம், வெற்றியும் அடைவர். எந்த ஒரு காரியத்தை செய்யும் முன்னும், பல முறை யோசித்து செய்ய வேண்டும் என, சொல்வதோடு மட்டுமில்லாமல், அவ்வாறே நடந்தும் கொள்ளுவர்.

இவர்களுடையப் பலவீனமும், இவர்கள் பலமே ஆகும். ஆம், யதார்த்தமாக வாழ்கிறோம் என்று, சினிமாவில் தான், காதலியின் கையைப் பிடித்துக் காதலன் உறுகுவான், நிஜத்தில் அல்ல என்று, தங்களுடைய மன உணர்வுகளை வெளியில், காட்டத் தெரியாத வெகுளிகள்.

தூய்மையான மனம் இருந்தும், அதை வெளிப்படுத்தத் தெரியாத அப்பாவிகள். இவர்கள், மனம் விட்டுப் பேசினால், மனதில் உள்ளதை வெளியில் காண்பித்தாலே, இவர்கள் அனைவரது உள்ளத்திலும், உயர்ந்து நிற்பார்கள் என்பதில், எவ்வித சந்தேகமும் இல்லை.

கன்னி ராசிக்காரர்களின் நல்வாழ்விற்கான அதிர்ஷ்ட குறிப்புகள்!

1.உங்கள் வீட்டில் பெண் குழந்தைகள் இருந்தால், அவர்களுக்கு மூக்குத்தி அணிவிப்பது குடும்பத்திற்கு வளம் சேர்க்கும்.

2.மழை பெய்யும் பொழுது, மொட்டை மாடி அல்லது வீட்டின் மேற்கூரையில், மழை நீர் ஒரு பாத்திரத்தில் விழும் படி வைக்க, வீட்டிற்கு அதிர்ஷ்டம் உண்டாகும்.

3.வீட்டில் வழிபாடு செய்யும் இடத்தை, அடிக்கடி மாற்றக் கூடாது.

4.புத்தாடை அணியும் முன், அவற்றில் கொஞ்சம் கங்கை தீர்த்தம் அல்லது தீர்த்தாகர்ஷண மந்திரம் ஜெபிக்கப்பட்ட தண்ணீரை, அந்த ஆடையில் சிறிது தெளித்த பின் அணிந்து வர, என்றும் ஆடை, அணிகலன்களுக்குக் குறை என்பது இருக்காது.

5.சனிக்ரஹ சாந்தி செய்து கொள்ளவும்.

6.மது, புகையிலை, புகைப்பிடிப்பது போன்ற, போதைப் பழக்கங்களை முற்றிலும் தவிர்ப்பது வாழ்வில் உயர்வு தரும்.

7.புதன்கிழமை அன்று, ஒரு மண் மூடியில் அகல் விளக்கு வைத்து, அதை ஓடும் நீர் அல்லது கடலில் விடவும்.

8.புதன்கிழமைகளில் விரதம் இருப்பது நல்லது.மேலும் அன்று யாரையும் சபிக்கவோ யாருக்கும் வாக்குறுதி (PROMISE) அளிக்கவோ கூடாது.

9.பச்சை நிற, கர்ச்சீப் வைத்திருப்பது அதிர்ஷ்டம் தரும்.

இந்த எளிய வழிகளைப் பின்பற்றுவதன் மூலம், வாழ்க்கையில் எளிதாக அதிர்ஷ்டத்தை அடைய இயலும்.