கள்ளழகர் கோயில் அர்ச்சகர் அழுகை! அனுமதிக்கு நன்றி!

08 May 2020 கோயில்கள்
alagar2020.jpg

இன்று மாலையில், திருமாலிருஞ்சோலை கள்ளழகர் கோயில் கள்ளழகர் உற்சவம் நடைபெற்றது.

இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவானது அமலில் உள்ள காரணத்தால், இந்த ஆண்டு நடைபெற இருந்த சித்திரைத் திருவிழாவானது தடை செய்யப்பட்டது. இருப்பினும், ஐதீகத்திற்காக, மதுரை மீனாட்சி அம்மன் சுந்தரேஸ்வரர் கோயிலுக்குள்ளேயே, திருக்கல்யாண வைப நிகழ்ச்சி நடைபெற்றது.

இதே போல், அழகர் கோயில் கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல் வைபவமானது தடை செய்யப்பட்டது. இருப்பினும், ஐதீகத்திற்காக இன்று மாலை 4.30 மணியளவில் மண்டூக மகரிஷிக்கு சாபம் தீர்த்தருளும் வைபம் மட்டும் நடைபெற்றது. அப்பொழுது, சுந்தர்ராஜ பெருமாள், பத்து அவதாரத்திலும் காட்சியளித்தார்.

இந்த நிகழ்ச்சிக் குறித்துப் பேசிய தலைமை அர்ச்சகர், வருடா வருடம் இந்தத் திருவிழா நடைபெற்று வந்தது. இந்த ஆண்டு நடைபெறமால் இருப்பது, மிகவும் கஷ்டமான விஷயம் எனக் கூறிக் கொண்டிருக்கையிலேயே கண்கலங்கி விட்டார். இருப்பினும், மிகவும் முயன்றே இந்த உற்சவத்தினை, கோயிலுக்குள்ளேயே நடத்துவதற்கு அனுமதி பெற்றுள்ளோம். அனுமதி கொடுத்தவர்களுக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன் என்றுக் கூறினார். பின்னர், கோயிலுக்குள்ளேயே மண்டூக மகரிஷிக்கு சாபம் தீர்த்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது.