கன்னி ராசியின் பலம் மற்றும் பலவீனம்! அதிர்ஷ்டக் குறிப்புகள்!

24 October 2019 ஜோதிடம்
kadagam.jpg

இந்த ராசியின் அதிபதி, சந்திரன் ஆவார். இவர்கள் இயல்பாகவே, காதல் பிரியர்கள். அனைவர் மீதும் எளிதாக, தங்கள் அன்பை வைத்து விடுவர். மிகவும் உணர்ச்சி வசப்படக் கூடியவர்கள், அதே சமயம், அதிக கற்பனைத் திறனுடன் இவர்கள் காணப்படுவர். இவர்களுக்கு, ரொமான்ஸ் செய்வது என்றால், மிகவும் பிடிக்கும். அதே போல் தான், காதலும். காதல், காதல், காதல் என, காலம் முழுக்க அதற்காகவே வாழ்வர். இவர்கள் இயற்கையாகவே திறமைசாலிகள் தான்.

இவர்களுடையப் பலவீனம், அதிகமாக யோசிப்பது. ஆம், இவர்கள் ஏற்கனவே சரியானப் பாதையில், சரியான முடிவை எடுத்து விட்டுப் பயணம் செய்வர். திடீரென்று, இவர்கள் மனதிற்குள் ஒன்று தோன்றும், நாம் சரியாகத் தான் செய்கிறோமா, நாம் ஒரு வேளை தவறாக செய்துவிட்டால் என்ன ஆகும், என ஓவர் திங்கிங் செய்து, செய்யும் செயலை சொதப்பிவிடுவர். அவ்வாறு, ஓவர் திங்கிங் செய்யாமல் இருந்தாலே, இவர்கள் வாழ்க்கை நிம்மதியானதாக மாறிவிடும்.

கடக ராசிக்காரர்களின் நல்வாழ்விற்கான அதிர்ஷ்ட குறிப்புகள்!

1.செம்பு நட்டு, போல்ட் போடப்பட்ட கட்டிலில் உறங்குவது நல்லது.

2.வெள்ளி டம்ளரில், பால் அருந்துவது அதிர்ஷ்டம் கொண்டு வரும்.

3.நீங்கள் மருத்துவர்களாக அல்லது ஹீலராக இருந்தால், கஷ்டப்படும் மக்களுக்கு, கொஞ்சமாவது குறைந்த செலவில் அல்லது இலவசமாக சேவை செய்வது, நன்மை தரும்.

4.எப்பொழுதும், வெறும் காலுடன் கோயிலுக்கு செல்ல வேண்டும்.

5.ஆன்மீக பண்டிகை மற்றும் நிகழ்ச்சிகளில், உங்களால் முடிந்த தொண்டினை செய்ய வேண்டும்.

6.பௌர்ணமி அன்று தாயிடம் இருந்து, ஒரு வெள்ளி நாணயம் மற்றும் கொஞ்சம் பச்சரிசியை ஒரு வெள்ளைத் துணியில் முடிந்து வாங்கி, அதை எப்போதும் பீரோ அல்லது பணப்பெட்டியில், வைத்திருந்தால் என்றும் வறுமை ஏற்படாது.

7.சிறு வெள்ளித் துண்டு (SILVER BRICK) வாங்கி, அதை வீட்டின் முன் வாசலில் வைத்து எரித்து விடவும். இதுவும் வறுமை கடன் ஏற்படாமல தடுக்கும்.

இந்த எளிய வழிகளைப் பின்பற்றுவதன் மூலம், வாழ்க்கையில் எளிதாக அதிர்ஷ்டத்தை அடைய இயலும்.