தைப்பூசத் திருவிழா கோலாகலம்! முருகனின் கோயில்களில் பக்தர்கள் குவிந்தனர்!

4 March 2020 ஜோதிடம்
arudra1.jpg

தற்பொழுது ஜோதிடர்கள் மத்தியிலும், ஆன்மீகவாதிகள் மத்தியிலும் பரவாலக பேசப்படும் பொருளாக திருவாதிரை நட்சத்திரம் உள்ளது. அதற்கு முக்கியக் காரணம், அது அழிய உள்ளதாக பரவிய தகவல்கள் தான்.

திருவாதிரை நட்சத்திரத்தின் அளவும், ஒளிவீசும் தன்மையும் குறைந்துவிட்டதாகவும், இதனால் அந்த நட்சத்திரம் எந்த நேரத்திலும் வெடித்துச் சிதறலாம் எனவும் விஞ்ஞானிகள் கூறுவதாக, பலர் நம்புகின்றனர். இதனால், மிதுன ராசி மற்றும் மிதுன லக்னகாரர்களுக்கு ஆபத்து எனவும், திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சிக்கல்கள் ஏற்படும் எனவும் கூறி வருகின்றனர்.

இது குறித்து, பிரபல ஜோதிடர்களும் பலக் கருத்துக்களைக் கூறி வந்தாலும், பெரிய அளவில் இதனை மதிக்கவில்லை என்று தான் கூற வேண்டும். உண்மையில் நடப்பது என்ன என்பது பற்றிப் பார்ப்போம். திருவாதிரை நட்சத்திரமானது, மிதுன ராசி மண்டலத்தில் அமைந்துள்ள ஒரு முழு நட்சத்திரம் ஆகும். அந்த நட்சத்திரன் அதிபதியாக ராகு பகவான் இருக்கின்றார். இது, பெடில் கீஸ் (Betelgeuse) எனும் நட்சத்திரக் கூட்டத்தினைச் சார்ந்தது. இது பார்க்க கரும் சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும். இதனால், இது சிவன் பிறந்த நட்சத்திரமாக கருதப்படுகின்றது. உண்மையில், இது சிவனின் நெற்றிக் கண்ணினைப் போல காட்சியளிக்கும்.

இந்த நட்சத்திரமானது, கடந்த செப்டம்பர் மாதம் 2019ம் ஆண்டு இருந்து தற்பொழுது வரை, 25% அழிந்துவிட்டதாக கூறப்பட்டு வருகின்னறது. இந்த நட்சத்திரம், தன்னுடைய ஒளிஉமிழ் தன்மையை இழந்துவிட்டது. இந்த நட்சத்திரமானது, 8.5 மில்லியன் வருடங்களுக்கு முன்னர் தோன்றியதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதுவும், ஒரு தோராயமான கணக்குத் தான். இந்த நட்சத்திரம் ஓரியன் நட்சத்திரக் குழுமத்தில் உள்ள இரண்டாவது அதிகப் பிரகாசம் நிறைந்த நட்சத்திரமாக பார்க்கப்படுகின்றது.

ஆரம்ப காலத்தில், வெந்நீல நிறத்தில் இருந்த இந்த நட்சத்திரம், காலப்போக்கில் அதிக வெப்பம் மற்றும் வேகத்தின் காரணமாக, அடர்சிவப்பு நிறத்திற்கு மாறிவிட்டது. இந்த நட்சத்திரமானது, புவியில் இருந்து, 700 ஒளி ஆண்டுகளுக்கு அப்பால் இருப்பதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது. அனைத்து நட்சத்திரங்களிலும், ஹைட்ரஜன் அணுக்கள் ஒன்றாக இணைந்து ஹீலியம் உற்பத்தி ஆகும். பின்னர், இந்த ஹீலியம் எரிந்து, நெருப்பு வெளிப்படும். இவ்வாறு தான், அனைத்து நட்சத்திரங்களும் செயல்பட்டு வருகின்றன.

இந்த நிகழ்வின் அடிப்படையில் தான், திருவாதிரை நட்சத்திரமும் செயல்பட்டு வருகின்றது. ஆனால், அந்த நட்சத்திரத்தில் உள்ள ஹைட்ரஜன் அணுக்களின் அளவானது, கிட்டத்தட்ட முடிந்து விட்டது எனக் கூறப்படுகின்றது. இதனால், இந்த நட்சத்திரம் சில நாட்களில், சில மாதங்களில் அல்லது சில வருடங்களில் வெடித்துச் சிதறும் எனவும், பின்னர், அந்தப் பகுதியில் நெபுலா உருவாகும் எனவும் கூறப்படுகின்றது.

ஆனால், உண்மையில் இந்த நட்சத்திரம் தன்னைத் தானே மறைக்கும் தன்மைக் கொண்ட விசித்திரமான நட்சத்திரம் ஆகும். அதாவது, சுருங்கி விரியும் அமைப்பில் இது உருவாகி இருக்கும். ஒரு நேரம் பார்க்க மிகவும் பெரிய நட்சத்திரமாக, அனைவருக்கும் தெரியும். மறு நேரம் பார்க்க, மிகச் சிறிய நட்சத்திரமாக தெரியும். இது பற்றி, நாசா உள்ளிட்ட எந்த வான்வெளி ஆராய்ச்சி செய்யும் நிறுவனமும், அழியப் போகின்றது எனக் கூறவில்லை.

இன்னும் உறுதியாகக் கூற வேண்டும் என்றால், இது வெறும் புரளி எனக் கூறலாம். காரணம், இது அழியப் போகின்றது, விஞ்ஞானிகள் கூறியுள்ளனர் எனக் கூறுபவர்கள், எந்த விஞ்ஞானி கூறியுள்ளார். எந்த நிறுவனத்திற்காக கூறியுள்ளார் எனக் கூறவில்லை. எந்த நட்சத்திரமும் ஒரு நாள் அழியத் தான் செய்யும் என்பது இயற்கை என்றாலும், அவை அழிவதை நம்மால் புவியில் இருந்து கொண்டு தெளிவாக எவ்விதப் பிரச்சனையும் இன்றி பார்க்க இயலும். ஏனெனில், ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ள 27 நட்சத்திரங்களுமே, புவியில் இருந்து பார்த்து கணித்து பின்னரே ஏற்றுக் கொள்ளப்பட்டன.

அப்படிப் புவியில் இருந்து பார்த்து கணித்து, ஏற்றுக் கொள்ளும் தூரத்தில் உள்ள நட்சத்திரங்களின் அழிவை, தெளிவாகக் காண இயலும். இன்று வரை, வானத்தில் அப்படியொரு நிகழ்வானது நிகழவில்லை. இதில் இருந்தே, நீங்கள் உண்மையைப் புரிந்து கொள்ளலாம். இந்த நட்சத்திரம் அழியும் நிலையில் இல்லை என்று. மேலும், இதனால் எந்த ராசிக்கும், நட்சத்திரத்திற்கும் எவ்வித பாதிப்பும் உண்டாகாது.