ஹரி ஹர பிரம்மா யோகம்!

10 February 2020 ஜோதிடம்
hariharabrahmayogam1.jpg

யோகங்களில், மும்மூர்த்திகளின் அம்சமாக இந்த யோகம் பார்க்கப்படுகின்றது. இதற்கு ஹரி, ஹர பிரம்மா யோகம் என அழைக்கப்படுகின்றது. ஒருவர் ஜாதகத்தில், ஏழாம் அதிபதி நின்ற இடத்தில் இருந்து, நான்கு, எட்டு மற்றும் ஒன்பதாம் இடங்களில், சுபக் கிரகங்கள் அமர்ந்தால், இந்த யோகம் உண்டாகும்.

உதாரணமாக, உங்கள் ஜாதகத்தில் ஏழாம் அதிபதி, ஏழாம் இடத்தில் இருக்கின்றார் என வைத்துக் கொள்வோம். அவருக்கு, பத்தாம் இடம், இரண்டாம் இடம் மற்றும் மூன்றாம் இடத்தில் சுபக் கிரகங்கள் அமர இந்த யோகம் உண்டாகும். இது ஏழாம் இடத்தில் மட்டுமல்ல, ஏழாம் அதிபதி எந்த இடத்தில் அமர்ந்தாலும், அதற்கு நான்கு, எட்டு மற்றும் ஒன்பதாம் இடங்களில், கிரகங்கள் அமர்வது இந்த யோகத்தினை உண்டாகும்.

ஹரி ஹர பிரம்மா யோகம் பலன்கள்

இந்த யோகத்தினை உடையவருக்கு, தொழிலில் நல்ல வெற்றி கிடைக்கும். தொழில் மூலம் நல்ல லாபம், ஆதாயம் உண்டாகும். முதலீடு சம்பந்தப்பட்ட விஷயங்களில், சரியான முடிவினை எடுப்பார்கள். பேச்சில் இனிமை தெரியும். மென்மையாக பேசும் குணம் உண்டாகும். சகோதரருடன் நல்ல உறவினைப் பேணுவர். இந்த பலன்கள் ஏற்பட, மேற்கூறப்பட்ட இடங்களில், கிரகங்கள் நல்ல நிலைமையில் இருக்க வேண்டும்.