ஹம்ச மகா புருஷ யோகம் என்றால் என்ன?

10 May 2020 ஜோதிடம்
gurupeyarchi.jpg

குரு பகவானால் ஏற்படுகின்ற யோகத்திற்கு, ஹம்ச மகா புருஷ யோகம் என்று பெயர். இந்த யோகமானது, பொதுவாக, தனுசு மற்றும் மீன லக்கினத்தினைச் சேர்ந்தவர்களுக்கு, அதிக நன்மையினை அளிக்கக் கூடியது. இதில், இரண்டு தரம் உள்ளன. மகா புருஷ யோகம் என்றால், மிகப் பெரிய யோகங்களில் ஒன்றாகும். ராகு, கேது, சூரியன், சந்திரன் ஆகியோரை தவிர்த்து, மற்ற கிரகங்களை குஜாதி ஐவர்கள் என ஜோதிடம் எனும் வானியக் கணிதத்தில் அழைப்பர்.

அதில், பொன்னன் என அழைக்கப்படும் குரு பகவானால் உருவாகும் யோகமே இந்த ஹம்ச யோகம் ஆகும். குரு பகவான் லக்னத்திற்கு கேந்திரங்களிலோ அல்லது திரிகோணங்களிலோ இருந்தால், இந்த யோகம் உண்டாகும். இதில், திரிகோணங்களில் இருந்தால் முதல் தரமான ஹம்ச மகா புருஷ யோகமும், கேந்திரங்களினால் இருந்தால் இரண்டாம் தரமான ஹம்ச மகா புருஷ யோகமும் உண்டாகும். இவைகள் இரண்டுமே, ஒரே மாதிரியான பலன்களை வழங்கவல்லை. இந்த பலன்களில், 2 பிரிவுகள் உள்ளன. அவைகளைப் பற்றியும், சற்று விரிவாகக் காண்போம்.

இந்த யோகம் உடையவர்கள், பார்ப்பதற்கு மிக அழகாக காட்சித் தருவர். அவர்களுடையக் கன்னம் பார்ப்பவர்களை சுண்டி இழுக்கும். இந்த யோகம் உடையவர்களின் தோலானது, தங்கத் துகள்கள் போல மின்னும். அந்த அளவிற்கு, பொலிவாக தோல் அமையும். இனிமையானக் குரல் இருக்கும். இதனால், இவர்களைப் பெண்கள் விரும்புவர். இந்த யோகத்தினை உடையவர்கள், அறிவுப் பசி உடையவர்கள் எனக் கூறலாம். சாஸ்திரங்களின் மீது ஆர்வம் உண்டாகும்.

அடுத்தவர்களுக்கு நன்மைகள் பல செய்வார்கள். அவ்வாறு செய்யும் நன்மைகளுக்கு, எவ்வித எதிர்பார்ப்பும் இல்லாமல் வாழ்வர். நீர் விளையாட்டுக்கள், வார்த்தை விளையாட்டுகள், பேச்சுப் போட்டிகளில் திறமை பெற்றவர்களாக இருக்கும் வாய்ப்புகள் உள்ளன. இவர்களுக்கு மிக அழகான மனைவி அமைவார். பல்வேறு விதமான சுகபோகங்களை அனுபவிப்பார்கள். மகிழ்ச்சிக்கும், மன நிறைவிற்கும் என்றும் குறையிருக்காது.

குருவும், லக்னாதிபதியும் ஹம்ச மகா புருஷ யோகம் உள்ளவருக்கு சிறப்பாக அமைந்து விட்டால், ஜாதகர் 100 வயது வரை வாழ்வர். குருவுடன் மற்றக் கிரகங்கள் இணைந்தால், இந்த மகா புருஷ யோகத்தின் அளவானது, பங்கமாகி குறைந்துவிடும்.

இதனால், ஹம்ச மகா புருஷயோகமானது, ஹம்ச யோகமாக மாறிவிடும். இந்த ஹம்ச யோகமானது, சூரியன் மற்றும் சந்திரனின் தொடர்பால் ஏற்படக் கூடியது. குரு பகவான் லக்னத்திற்கு, கேந்திர, திரிகோணங்களில் அமைந்து, அவருடன் சூரியன், சந்திரன் இணைந்தால், இந்த ஹம்ச யோகம் உண்டாகும்.

இந்த யோகமும், ஹம்ச மகா புருஷ யோகத்தின் பலன்களை வழங்க வல்லது தான். ஆனால், குரு பகவானின் தசை, புத்தி, அந்தரம், கோச்சாரம் உள்ளிட்டவைகளில் மட்டுமே வழங்கும். அடுத்த அமைப்பானது, குருவின் வலிமையை சூரியன் அல்லது சந்திர பகவான் பெறுவதல் ஏற்படுவது. இதுவும், குரு வழங்கும் வளம், நலம் ஆகியவற்றைக் குறைக்கக் கூடியது. இருப்பினும், ஜாதகர் மகிழ்ச்சியுடனே வாழ்வார்கள்.