மிகவும் பண்பான இராசிகள்

24 October 2019 ஜோதிடம்
27.jpg

பண்பாடு என்பது நம்முடையப் பல தலைமுறைகளுக்குச் சொந்தமானது. இதனை அனுபவித்துவிட்டு அது கெடாமல் அடுத்த தலைமுறைக்குத் தருவது நம் அனைவருடைய கடைமையாகும். ஆனால், இதனை அனைவருமே முறையாகச் செய்வதில்லை. இருப்பினும், ஒரு சிலர் மிகவும் கண்டிப்புடன் நடந்து கொண்டு தன்னுடையப் பண்பாட்டை அடுத்த தலைமுறைக்கு கற்றுத் தருகின்றனர். இராசிகளின் அடிப்படையில் பின்வரும் ஏழு இராசிகளும் பண்பாட்டைப் பேணிப் பாதுகாப்பதிலும், காப்பாற்றுவதிலும் வல்லவர்களாக இருக்கின்றனர்.

ரிஷபம், கடகம், கன்னி, மகரம், துலாம், கும்பம் மற்றும் மீன இராசிக்காரர்களே பண்பாட்டைப் பேணிப் பாதுகாப்பதில் வல்லவர்கள். மற்ற இராசிக்காரர்களைக் காட்டிலும் இந்த இராசிக்காரர்கள் பிறருக்கு புரியும் வகையில் தன் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் உலகுக்கு எடுத்துரைக்கின்றனர். இவர்கள் தங்கள் பண்பாடு மற்றும் கலாச்சாரம் பற்றி அறிந்துக் கொள்வதற்காகப் பல ஆராய்ச்சிகளிலும் ஈடுபடுகின்றனர்.

அதிலும் ரிஷப இராசிக்காரர்கள் பிறரை உபசரிப்பதில் வல்லவர்கள். இவர்களைத் தேடி யார் வந்தாலும் இவர்கள் முகம் சுழிக்காமல் இன்முகத்தோடு நடந்துகொள்வர். கடக இராசிக்காரர்கள் குழந்தைகள் மீது மிகவும் பாசமாக இருப்பர். இவர்கள் குழந்தைகளுக்கு நல்லதை மட்டுமே எடுத்துக் கூற வேண்டும் என்பதில் மிகவும் பிடிவாதமாக இருப்பர். இவர்கள் இறைவழிபாடு மற்றும் தாய், தந்தையைப் பேணுவதில் வல்லவர்கள். பழைய சாஸ்திர சம்பிரதாயங்களைக் காப்பதில் இவர்களுக்கு நிகரானவர் இவ்வுலகில் இல்லை.

மகர இராசிக்காரர்கள் தன் சுற்றி இருப்பவர்களுக்காகவும், தனக்குச் சொந்தமான கலாச்சாரத்திற்காகவும் எப்பேற்பட்டக் கஷ்டத்தையும் தாங்கும் தன்மை உள்ளவர்கள்.

துலாம் இராசிக்காரர்கள் நேர்மையுடன் நடந்து கொள்வதில் அதிக விருப்பமுடையவர். இவர்களுக்கு பழங்காலப் பொருட்களை வாங்குவதிலும் அது தொடர்பான வியாபாரத்திலும் ஆர்வம் அதிகம் இருக்கும். பண்பாடு, கலாச்சாரத்திற்காக செலவு செய்வதில் கும்ப இராசிக்காரர்களுக்கு நிகர் கும்ப இராசிக்கார்ரகளே. இவர்கள் அதிகமாக கோவில்களுக்குத் தானம் செய்வதிலும், பழைமையை மதித்துப் போற்றுவதிலும் வல்லவர்கள்.

கலாச்சாரம் இன்றி நாம் இல்லை என நினைத்து அதனைப் பேணி வாழ்வதில் மீன இராசிக்கார்ரகள் வல்லவர்கள். இவர்கள் தன்னுடைய இலாபத்திற்காகக் கூட இவருடைய கலாச்சாரத்திற்கும் இவரை நம்பி இருப்பவருக்கும் துரோகம் செய்யமாட்டார்கள்.