கருட தரிசனம் நடைபெற்றது! பக்தர்கள் பரவசம்!

24 October 2019 சாஸ்திரம்
garudasevai.jpg

திருமலை திருப்பதியில், வருடாந்திர பிரம்மோற்சவம் நடைபெற்று வருகின்றது. 5வது நாளான நேற்று காலை, மோகினி அவதாரத்தில், பக்தர்கள் கூட்டத்தில் கோவிந்தா! கோஷம் விண்ணதிர வீதி உலா வந்தார்.

இந்நிலையில், பெருமாளின் பெரிய திருவடியான, கருடாழ்வார் வாகன சேவை நேற்று மாலை நடைபெற்றது. சேவைகளிலேயே பெரிய சேவையான கருடாழ்வார் சேவையே, உலகளவில் பிரசித்துப் பெற்றது.

இதனைக் காண்பதற்கு, மாலை நான்கு மணியிலிருந்தே, லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்த வண்ணம் இருந்தனர். சரியாக மாலை, 7.30 மணியளவில், மலையப்ப சுவாமிகள், கருட வாகனத்தில் வீதி உலா வந்தார். மேள தாளம் முழங்க, கலை நிகழ்ச்சிகள் நடைபெற மாட வீதிகளில் பக்தர்கள் இடையே, மலையப்பர் கருட வாகனத்தில் உலா வந்தார்.

இரவு 12 மணிக்கு, மீண்டும் கோவிலுக்குள் திரும்பிச் சென்றார். திருவிழாவின் 6வது நாளான இன்று, காலை ஒன்பது மணிக்கு ஹனுமந்த சேவையும், இரவு ஒன்பது மணிக்கு சந்திர பிரபை வாகனத்திலும் உலா வர உள்ளார்.