யம தீபம் எப்பொழுது ஏற்ற வேண்டும்? எதற்கு ஏற்ற வேண்டும்?

24 October 2019 சாஸ்திரம்
deepam.jpg

யம தீபம் என்பது, தீபாவளிக்கு முந்தைய நாளன்று ஏற்றப்படும் ஒரு தீபமாகும். இதனை ஏற்றுவதன் மூலம், எம தர்மரின் ஆசிர்வாதத்தினைப் பெற இயலும் என, ஆன்மீகவாதிகள் நம்புகின்றனர்.

இந்த விளக்கினை ஏற்றுவதன் மூலம், பித்துருக்களின் ஆசிர்வாதம் கிடைக்கும். மேலும், கணவனின் ஆயுள் கூடும். வீட்டில் இருப்பவர்களுக்கு உள்ள, தோஷங்களின் பாதிப்புகளும் குறையும் என்பது நம்பிக்கை.

இந்த தீபத்தினை, தெற்கு பக்கம் பார்க்குமாறு வைக்க வேண்டும். தீபத்தின் சுடர், தெற்கு நோக்கி எரிய வேண்டும். மேலும், ஒரு விள்ளக்கு அல்லது எட்டு விளக்கு என்ற கணக்கில் ஏற்றலாம். மண்ணால் ஆன விளக்கினை மட்டுமே ஏற்ற வேண்டும்.

இந்த ஆண்டு, இந்த எம தீபத்திற்கான நேரம் ஜோதிடர்களால் கணிக்கப்பட்டுள்ளது. அதன் படி, இன்று மாலை 5.41 முதல் 6.58 மணி வரை இந்த விளக்கினை ஏற்றி வைக்க வேண்டும். 6.58க்குத் தான், இந்த விளக்கினை இறக்க வேண்டும்.

விளக்கினை ஏற்றும் பொழுது, எம தர்மரிடம் நல்ல ஆயுள், கஷ்டங்கள் மற்றும் பாவங்களை நீக்க பிரார்த்தனை செய்ய வேண்டும். வேறு எதுவும் கேட்கக் கூடாது.