ஒவ்வொரு ராசியினருக்கும் பல வித்தியாசங்கள் உள்ளன. அதற்கேற்றாற் போல, ஒவ்வொரு விநாயகருக்கும் பல வித்தியாசங்கள் உள்ளன. நம்முடைய ராசிக்கு ஏற்றாற் போல, விநாயகரை வணங்குவதன் மூலம் பல நன்மைகளை நம்மால் அடைய இயலும்.
மேஷ ராசிக்காரர்கள் விக்ன கணபதியினை வணங்குவது பல சிறப்புகளை வழங்கும். இவரை வணங்குவதால், வாழ்வில் இருந்து வந்த சிக்கல்கள், தடைகள் அனைத்தும் நீங்கும். நோய்கள் அற்ற வாழ்வு உண்டாகும்.
ரிஷப ராசிக்காரர்கள் லஷ்மி கணபதி வழிபாட்டினை மேற்கொள்ளலாம். அவ்வாறு லஷ்மி கணபதியினை வணங்குவதன் மூலம், பல்வேறு சிறப்புகளை நீங்கள் அடைய இயலும். அஷ்ட லட்சுமி கடாட்சம் உங்கள் வீட்டில் உண்டாகும். ஆரோக்கியம் அதிகரிக்கும்
மிதுன ராசிக்காரர்கள் துவிமுக கணபதியினை வணங்க வேண்டும். அவ்வாறு வணங்குவதன் மூலம், வாழ்வில் பல மாற்றங்கள் ஏற்படும். நல்ல வளர்ச்சியான எதிர்காலம் உண்டாகும்.
கடக ராசியினருக்கு வித்யா கணபதி சகல சம்பத்தினையும் வாரி வழங்குவார். அவரை வணங்கி வழிபாடு செய்வதன் மூலம், எவ்வித சிக்கல்களும் இல்லாத, மகிழ்ச்சிகள் நிறைந்த வாழ்க்கை அமையும்.
சிம்ம ராசிக்காரர்கள் விஜய கணபதியினை வழிபடலாம். இவரை வணங்குவதன் மூலம், வாழ்வில் ஈடுபடும் காரியங்கள் அனைத்திலும் வெற்றிகள் குவிந்து கொண்டே இருக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். பாவங்கள் நம்மை விட்டு விலகும்.
புதனின் ஆதிக்கத்தில் உள்ள கன்னி ராசிக்காரர்களுக்கு மோகன கணபதி வழிபாடு நன்மை அளிக்கும். இந்த கணபதியினை வணங்குவதன் மூலம், வாழ்வில் மென்மேலும் உயர இயலும். வளர்ச்சிப் பாதையில், மோகன கணபதி அழைத்துச் செல்வார்.
மகாலட்சுமியின் கடாட்சம் பொருந்திய துலாம் ராசி அன்பர்கள், க்ஷிப்பிரசாத கணபதியினை வணங்க வேண்டும். அவரை வணங்குவதன் மூலம், ஈடு இணையற்ற செல்வ சேர்க்கை உண்டாகும்.
முருகக் கடவுளின் அருள் நிறைந்த விருச்சிக ராசியினர், சக்தி கணபதி வழிபாட்டினை மேற்கொள்ளலாம். அவரை வணங்குவதன் மூலம், வாழ்வில் சுப நிகழ்ச்சிகளும், மங்களுங்களும் பெருகும்.
இறையருள் நிறைந்த தனுசு ராசி அன்பர்கள், பக்தி கணபதியினை வணங்கலாம். அவரை வணங்குவதன் மூலம், வாழ்வில் பல வெற்றிகளைப் பெற இயலும்.
மகர ராசியினர் வீர கணபதியினை வணங்குவதன் மூலம், மிகவும் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். ஈடுபடும் முயற்சிகள் அனைத்திலும், வெற்றிக் கிடைக்கும்.
கும்ப ராசியினர், உச்சிஷ்ட கணபதியினை வணங்க வேண்டும். அவ்வாறு அவரை வணங்குவதன் மூலம், வீட்டில் செல்வ செழிப்பு, தொழிலில் முன்னேற்றம், வாழ்வில் இருந்த தடைகள் நீங்குதல், கல்வியில் வளர்ச்சி முதலியவை ஏற்படும்.
மீன ராசியினர், யோக கணபதியினை வணங்க வேண்டும். அவ்வாறு வணங்குவதன் மூலம், வாழ்வில் யோகமானப் பலன்கள் உண்டாகும். உங்கள் ஜாதகத்தில் உள்ள அனைத்து யோகங்களும் மிகச் சிறப்பாக வேலை செய்யும்.