மும்மூர்த்திகள் ஒன்றாக இணைந்தால், எப்படி இருக்கும். அவர்கள் வழங்கும் அருள் எவ்வளவு மகிமையானது என, அனைத்து ஆன்மீகவாதிகளுமே, வாழ்வில் ஒருமுறையாவது யோசித்து இருப்பார்கள். அவர்கள் அனைவருக்கும் ஒரு பதில் உள்ளது அது தான் ஆம்.
ஆம், உண்மையில், மும்மூர்த்திகளும், ஒரு சமயம் ஒன்றாக இணைந்து, அவதாரம் எடுத்தனர். அந்த அவதாரத்தின் மறு பெயர் தான் தத்தாத்ரேயர்.
இந்தியாவில் மட்டுமின்றி, மியான்மர், நேபாளம் உள்ளிட்ட நாடுகளிலும், இவரை தெய்வமாக வணங்கி வருகின்றனர். முழுமையான ஞான சொரூபமாக இவர் விளங்குகின்றார். இவரைப் பற்றி, இராமாயணமும், மகாபாரதமும் குறிப்பிடுகின்றன.
அயன், அரி மற்றும் அரன் ஆகியோர் ஒரு முறை, அத்திரி மக ரிஷியின் வீட்டிற்கு வந்தனர். வந்தவர்கள் சும்மா வரவில்லை. முனிவர்களைப் போல வேடமிட்டு வந்திருந்தனர். அவர்களை, அத்திரி மகரிஷியின் பதிவிரதையான அனுசியா தேவி மகிழ்வுடன் வரவேற்று உபசரித்தார். அப்பொழுது, உணவருந்த வந்திருந்த மும்மூர்களும், அனுசியா தேவிக்கு ஒரு பரிட்சை வைத்தனர். நாங்கள் உணவருந்த வேண்டும் என்றால், நீ உன்னுடைய உடைகளை எல்லாம் களைந்து வைத்து விட்டு, நிர்வாணமாகவே உணவு பரிமாற வேண்டும் எனக் கூறினார்கள்.
அனுசியா தேவி கதிகலங்கிப் போனார். கணவனைத் தவிர, வேறு யாரையும் ஏரெடுத்தும் பார்க்காத அனுசியா இப்படிப் பரிமாறக் கூறினால் என்ன செய்வார்? திடீரென்று ஒரு யோசனை வந்தது. அந்த மூன்று முனிவர்களையும், குழந்தைகளாக தன்னுடைய கற்பின் சக்தியாலும், தவ வலிமையாலும் மாற்றினார். பின்னர், தாயாக பச்சிளம் குழந்தைகளுக்கு உணவுப் பரிமாறி இருந்தார். இதனை மூன்று தேவியர்களும் எதிர்பார்க்கவில்லை. உடனடியாக, வந்து அனுசியா தேவியிடம் தயவு செய்து எங்கள் கணவர்களை மீண்டும் பழைய நிலைக்கு மாற்ற வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.
அவரும் அப்படியே ஆகட்டும் என்றார். குழந்தைகளாக மாற்றப்படு இருந்த மூன்று மூர்த்திகளும், மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பினர். அனுசியாவின் கற்பின் வலிமையைக் கண்டு பாராட்டினர். பின்னர், எங்களை நீ தாயாக இருந்து உணவளித்ததால், நாங்கள் மூன்று பேருமே உணக்குக் குழந்தையாக இருப்போம் எனவும், நாங்கள் மூன்று பேரும் ஒன்றாக இணைந்து தத்தாத்ரேயர் என்றப் பெயரில் அவதாரம் எடுத்தனர்.
மூன்று தலைகளுடன், ஆறு கைகளுடன் ஒரே உடலில் மூன்று மூர்த்திகளும் இணைந்து தத்தாத்ரேயர் பிறந்தார். சங்கு, சக்கரம், உடுக்கை, சூலம், ஜெபமாலை, தாமரை என அவருடைய கை எப்பொழுதும் நிறைந்தே இருக்கும். முற்றிலும், துறவர வாழ்க்கையே வாழ்ந்தார் தத்தாத்ரேயர். அனைத்து உயிர்களையும், சமமாக மதிக்க வேண்டும் எனவும், இறைவன் முன்னிலையில் அனைவரும் சமம் எனவும் அவர் அறிவுறுத்தினார்.
காம எண்ணங்கள், காம பிரச்சனைகள் உட்பட பல வெளியில் சொல்ல இயலாத பிரச்சனைகளில் சிக்கித் தவிப்பவர்கள், தத்தாத்ரேயரை மனதார வணங்கி வர, அனைத்தும் தங்களுடைய கட்டுக்குள் வரும் என, இந்து மத குருக்குள் அறிவுறுத்துகின்றனர்.
ஓம் தத்தாத்ரேயாய வித்மஹே
யோகீஸ்வராய தீமஹி
தன்னோ தத்த ப்ரசோதயாத்