பிறந்த மாதத்தின் அடிப்படையிலான, பொதுவானக் குணநலன்கள்-தமிழ்

24 October 2019 ஜோதிடம்
tamilmonth.jpg
ஐப்பசி

இவர்களிடம் போராட்டக் குணம் அதிகமாகவே இருக்கும். தன்னுடைய இலட்சியத்திற்காகவும், குறிக்கோளுக்காகவும் இவர்கள் வாழ்கின்ற வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள். இம்மாதத்தில் பிறந்தவர்கள், பொதுவாக அழகுடனே இருப்பர். சிலர் மன்மதனாக வலம் வர வாய்ப்புண்டு. சோம்பேறித்தனம் அதிகமாக இருக்கும். வழக்காடும் தன்மையுடையவர்கள், எனவே நீதித்துறையில் சிறந்து விளங்கும் வாய்ப்புகள் அதிகம். ஐப்பசியில் பிறந்தப் பெண்களுக்கு நகை மற்றும் அணிகலன்களின் மீது அதிக மோகம் இருக்கும்.

கார்த்திகை

இவர்களிடம் தைரியம் சற்றுக் குறைவாகவே இருக்கும். அனுபவ அறிவு இவர்கள் வாழ்க்கை சிறப்பதற்குக் கை கொடுக்கும். தன்னுடைய சிறுவயதில் இருந்தே கஷ்டமான வாழ்க்கையை வாழ்ந்து, பின் நடுத்தர வயதை அடைந்தவுடன் சுகபோக வாழ்க்கையை வாழத் தொடங்குவர். கார்த்திகையில் பிறந்தவர்களிடம் சோம்பேறித்தனம் அதிகமாக இருக்கும். இம்மாதத்தில் பிறந்தப் பெண்கள் சகல ஐஸ்வர்யத்துடன் வாழ்வர்.

மார்கழி

சிறந்த பேச்சாற்றையும், ஆன்மீக அறிவையும் பெற்றிருப்பர். இவர்கள் செய்யும் செயலை வைத்தே, இவர்கள் மார்கழியில் பிறந்தவர்கள் என்பதை அறியும் அளவிற்கு மிகத் தனித்தன்மை வாய்ந்தவர்கள். திறமையாக தனக்குக் கொடுத்த வேலையைச் செய்து முடிப்பர். இவர்களால் பெரிய பிரச்சனைகளைச் சமாளிக்க இயலாது. இவர்களின் பேச்சுக்கும், எழுத்துக்கும் உலகளவில் செல்வாக்கு உண்டு. ஆனால், அதனை வெளிப்படுத்தும் விதத்தைப் பொறுத்தே பெயரும் புகழும் கிட்டும்.

தை

இவர்கள் பொதுவாக, பண விஷயத்தில் கராராக இருப்பார்கள். உயரதிகாரிகளை எளிதில் கைக்குள் போட்டுக் கொண்டு, தனக்கு வேண்டியவற்றைச் செய்து முடிப்பர். கடமைத் தவறாமல் பணியாற்றி நற்பெயர் பெறுவார்கள். இவர்களை நம்பினால், அது பெரும் ஏமாற்றத்தையேத் தரும். ரியல் எஸ்டேட் இவர்களுக்கு ஏற்றத் தொழிலாகும். உழைப்பைப் பாராட்டும் தன்மை உடையவர்கள். பொதுவாக இம்மாதத்தில் பிறந்த பெண்கள் அழகான உடல் அமைப்பைப் பெற்றிருப்பர். காதல் இவர்களுக்குச் சரிவராத ஒன்று.

மாசி

கோபத்திற்கு சொந்தக்காரர்கள் என்று இவர்களைக் கூறலாம். இவர்களிடம், எளிதில் உண்மையை மறைக்க முடியாது. எதையும் திட்டமிட்டு செயலாற்றும் தன்மை உடையவர்கள் இவர்களிடம் சிறிது கர்வம் இருக்கும். இந்த மாதத்தில் பிறந்த பெண்கள், திருமணத்திற்குப் பின் செல்வ செழிப்புடன் வாழ்வர். உறவுகளையும் நண்பர்களையும் நேசிப்பார்கள். விட்டுக்கொடுத்தல் மற்றும் மற்றவர்களை அனுசரித்துச் செல்வதின் மூலம் நற்பெயரைத் தக்கவைக்க இயலும். இவர்கள் இயல்பாகவே, நல்ல அறிவாளியாகவும், நல்ல உடல் ஆரோக்கியத்துடனும் இருப்பர். திருப்பதியில் உள்ள ஸ்ரீமலையப்ப சுவாமியை வணங்குவதன் மூலம் பெயரும், புகழும் பெற்று நீடூழி வாழலாம்.

பங்குனி

இவர்கள் விரைவில் தீயப் பழக்கங்களுக்கு அடிமையாகும் வாய்ப்புகள் அதிகம். இவர்கள் கலைத்துறையில் சிறந்து விளங்குவதற்கான வாய்ப்புகள் அதிகம். இயற்கையாகவே அனைத்தையும் ரசிக்கும் சுபாவம் கொண்டவர்கள். இம்மாதத்தில் பிறந்த பெண்கள், எப்பொழுதும் ஒரு வித பரபரப்புடனேயே இருப்பர். இறைப் பக்தி அதிகம் இருக்கும். பங்குனியில் பிறந்தவர்களிடம் பொய் பேசும் தன்மை அதிகம் காணப்படும், மேலும் இவர்களை எதிதாக புகழ்ந்து மயக்கிவிடலாம். இம்மாதத்தில் பிறந்தவர்களுக்கு பொதுவாக பெண் குழந்தைகளே அதிகமாகப் பிறக்கும்.