நீங்கள் இந்த தமிழ் மாதத்தில் பிறந்தீர்களா?

24 October 2019 ஜோதிடம்
tamilmonth.jpg

பல ஜோதிட முறைகளில், நாம் நம் வாழ்க்கையை கணிக்கிறோம். இந்த முறை, ஒருவரின் பிறந்த மாதத்தை வைத்துக் கூறப்பட்டுள்ள விஷயங்களைப் பற்றிப் பார்ப்போம்.

சித்திரை

இந்த மாதம் தமிழ் வருடத்தின் முதல் வருடம் ஆகும். இம்மாதத்தில் பிறந்தவர்கள் பொதுவாக நல்ல, உயர்ந்த இலட்சியம் உடையவராகவும், சிறந்த செயல்வீரராகவும் இருப்பர். இவர்களை வெறுப்பவர்கள் இவ்வுலகில் இல்லை எனக் கூறலாம். இவர்கள் செய்யும் எந்தச் செயலிலும் மின்னல் வேகம் காணப்படும். சில நேரங்களில் இவர்களை அனைவரும் ஒரு வில்லனைப் போலப் பார்க்க வாய்ப்புண்டு. சூரியன் உச்சத்தில் இருக்கும் போது பிறந்ததால், இயற்கையாகவே இவர்களிடம் கோபப்படும் தன்மை அதிகம் இருக்கும். இதனால், உறவுகளை இழக்கும் வாய்ப்புகள் அதிகம். இம்மாதத்தில் பிறந்தப் பெண்கள் மிகக் கவர்ச்சியாக இருப்பர்.


வைகாசி

இவர்களுக்கு ஞாபக சக்தி மிக அதிகமாகவே இருக்கும். இவர்களுக்கு அனுபவ அறிவு மற்றவர்களைக் காட்டிலும், சற்று அதிகமாகவே இருக்கும். நல்ல உடல்நலம் இவர்களுக்கு இயற்கையாகவே உண்டு. இம்மாதத்தில் பிறந்தவர்கள் தான் செய்யும் தொழிலில் அடி முதல் நுனி வரை மிகத் தெளிவாகவும், விரிவாகவும் தெரிந்து வைத்திருப்பர்.பொதுவாக வைகாசியில் பிறந்தவர்களுக்கு படிப்பறிவு சற்றுக் குறைவாகவே இருக்கும். அதிகம் சம்பாதித்தாலும,் சேமிப்பது இவர்களுக்கு மிகச் சிரமமான விஷயம் ஆகும். இம்மாதத்தில் பிறந்தவர்கள் சற்று சோம்பலுடன் காணப்படுவர். இம்மாதத்தில் பிறந்தப் பெண்கள் சிறந்த கணவன் அமையப் பெறுவர்.


ஆனி

இவர்களிடம் புத்திசாலித்தனம் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். கூர்மையான அறிவால், எளிதில் அடுத்தவர்களை அடக்கி ஆள்வர். நல்ல குணமும், பேசி மயக்கும் தன்மையும் உடையவர்கள். நாமும் வாழ வேண்டும், பிறரும் வாழ வேண்டும் என நினைப்பவர்கள். எடுத்தி வேலையை முடித்துவிட்டு பின்னர் அடுத்த வேலைச் செய்தால் இவர்களுக்க நல்ல எதிர்காலம் உண்டு. சந்தேக குணமும், நல்ல அறிவும் உள்ளதால் இவர்களை எளிதில் ஏமாற்ற இயலாது. நகைச்சுவை விரும்பி ரசிப்பர். மிக இலகிய மனம் உடைய இவர்களால், சிறுப் பிரிவைக் கூடத் தாங்க இயலாது. அதிக கௌரவம் பார்க்கும் இவர்கள், ரோஷக்காரர்களாகவும் இருப்பர்.


ஆடி

ஆடி மாதத்தில் பிறந்த இவர்களிடம் கற்பனைத் திறன் அதிகமாகவே இருக்கும். எதையும் திட்டமிட்டு செய்வதில் இவர்களுக்கு நிகரானவர்கள் இவ்வுலகில் இல்லை.திருமண வாழ்க்கையில், தன்னுடையத் துணையிடம் அன்பைக் காட்டுவதில் இவர்கள் மட்டுமே சிறந்தவர்கள். தாய்ப்பாசம் மிக அதிகமாகவே இவர்களிடம் காணப்படும். இவர்களைப் பகைப்பவர்களுக்குத் தோல்வியே மிஞ்சும். நல்ல அறிவும், புத்திசாலித்தனமும் இவர்களுக்கு உண்டு என்பதால் இவர்கள் தான் இறங்கியக் காரியத்தில் வெற்றிப் பெரும் வரைப் போராடுவர். இம்மாதத்தில் பிறந்தப் பெண்கள் மற்றவர்களை அனுசரித்துச் செல்வதின் மூலம் நல்ல வாழ்க்கையை வாழ முடியும்.


ஆவணி

இவர்களுக்கு சுதந்திரம் மட்டுமே வாழ்வாக இருக்கும். தொழில்களில் கூட கட்டுப்பாடில்லாத தொழிலையேச் செய்வர். ஆவணி மாதத்தில் பிறந்தவர்கள் வைகாசி மாதத்தில் பிறந்தவர்களை மணந்தால், யோகமான வாழ்க்கையைப் பெறுவர். மிகப் பெருந்தன்மையாக வாழப் பழகியவர்கள் என்பதால், மன்னிக்கும் மனம் இவர்களுக்கு இயற்கையாகவே உண்டு. சிக்கனத்திற்கும், கஞ்சத்தனத்திற்கும் வித்தியாசம் தெரியாதவர்கள். இம்மாதத்தில் பிறந்தவர்களுக்கு ஏற்ற வாழ்க்கைத் துணைக் கிடைப்பது மிகக் கடினம் ஆகும். கடவுள் அருளால், திருமணத்திற்கு முன்பே நல்ல வாழ்க்கையைத் தேர்ந்தெடுத்தல் மிக அவசியம் ஆகும்.


புரட்டாசி

இவர்கள் இயற்கையாகவே அதிர்ஷ்டசாலிகள் என்பதால், செல்வந்தனாகவே வாழ்வர். இதனால், இவர்களைப் பார்த்துப் பலரும் பொறாமைக் கொள்வர். நல்ல ஞானமும், அறிவும் இருப்பதால் நடக்கவிருப்பதை முன்கூட்டியே கணிக்கும் தன்மை உடையவர்கள். இத்தகைய நுண்ணறிவால், இவர்களை நேரடியாகப் போட்டியிட்டு வெல்ல இயலாது. இம்மாதத்தில் பிறந்தப் பெண்களை, கணவர்களுக்கு மிகவும் பிடிக்கும். மேலும், இம்மாதத்தில் பிறந்த பெண்கள், மிக அழகாகவும் நல்ல உடல்வாகுடனும் இருப்பர். இறைவன் அளித்த புத்திசாலித்தனத்தை நன்றாகப் பயன்படுத்தினால் மிகப் பெரியவாழ்க்கை அமையும்.