நட்சத்திரங்களின் பொதுவான குண நலன்கள்

24 October 2019 ஜோதிடம்
19.மூலம்
moolam.jpg ராசி-தனுசு; அதிபதி-கேது; அதிர்ஷ்ட தேவதை-ஸ்ரீ ஆஞ்சநேயர்; கணம்-ராட்சச கணம்; மிருகம்-பெண் நாய்.


செல்வம் செல்வாக்குக்குச் சொந்தக்காரர்களான இவர்கள் அனைவராலும் நேசிக்கப்படுவர். தான் செய்தத் தவறை மறைத்துத் தப்பித்துக் கொள்வர். தன்னுடைய தந்திர அறிவாலும், ஏமாற்றும் குணத்தாலும் நினைத்ததைச் சாதிக்கும் வல்லமை உடையவர்கள். இவர்கள் திறைமைசாலிகளாக மட்டுமின்றி சுறுசுறுப்பாகவும் இருப்பதால் வாழ்வில் விரைவில் நல்ல நிலைமையை அடைவர்.


20.பூராடம்
pooradam.jpg ராசி-தனுசு; அதிபதி-சுக்கிரன்; அதிர்ஷ்ட தேவதை-சிவபெருமான்; கணம்-மனித கணம்; மிருகம்-ஆண் குரங்கு


கர்வத்திற்கும், தற்பெருமைக்கும் செந்தக்காரர்களான இவர்கள், புத்திசாலியாகவும் உதவும் மனப்பான்மை கொண்டவர்களாகவும் இருப்பர். சுக்கிரன் இவர்களின் அதிபதி என்பதால் செல்வத்திற்கு என்றும் குறையிருக்காது. குடும்பம் பற்றிய சிந்தனை மேலோங்கி இருக்கும். இவர்களை மற்றவர்கள் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடுவர்.


21.உத்திராடம்
uthiradam.jpg ராசி-தனுசு,மகரம்: அதிபதி-சூரியன்; அதிர்ஷ்ட தேவதை-விநாயகர்; கணம்-மனித கணம்; மிருகம்-ஆண்கீரி, ஆண் பசு


நல்ல குணத்துடனும் சமூகத்தில் மதிக்கப்படும் மனிதராக இருப்பர். நன்றி மற்றும் கொடுத்த வாக்கிற்குக் கட்டுபட்டவர். எடுக்கும் முயற்சிகளில் எந்த வழியிலாவது சென்று தான் அடைய நினைத்ததை அடைவர். ஆன்மீக அறிவும் இறைவழிபாட்டில் அதிக ஈடுபாடும் கொண்டவர்கள் பொதுவாக இவர்கள் அழகான தோற்றம் உடையவர்கள். வாழ்க்கையில் செல்வந்தராகும் வாய்ப்பு இவர்களுக்கு அதிகம் உண்டு.


22.திருவோணம்
thiruvonam.jpg ராசி-மகரம்; அதிபதி-சந்திரன்; அதிர்ஷ்ட தேவதை-ஸ்ரீ விஷ்ணு, ஸ்ரீ ஹயக்கிரீவர்; கணம்-தேவ கணம்; மிருகம்-பெண் குரங்கு


இவர்கள் படித்து நல்லப் பதவியில் இருப்பர். சிறந்த கேள்வி அறிவும், ஞானமும் நிறைந்தவர்கள். திறமைசாலிகளாக இருப்பதால் தொழிலில் ஏற்படும் போட்டியைச் சாமாளித்து வெற்றி பெறுவார்கள். சமூகச் சீர்திருத்தவாதிகளாக இருப்பர். அனைத்து செல்வங்களையும் பெற்று வாழவர், இறைவழிபாட்டை அதிகம் செய்வார்கள்.


23.அவிட்டம்
avittam.jpg ராசி-மகரம்,கும்பம்; அதிபதி-செவ்வாய்; அதிர்ஷ்ட தேவதை-ஸ்ரீ பெருமாள்; கணம்- ராட்சச கணம்; மிருகம்- பெண் சிங்கம்


உறுதியான சிந்தனையும், மனோபலமும், கொண்டவர்கள், தைரியமானவர்கள், மற்றும் மற்றவர்களை மதிக்கும் தன்மை உடையவர்கள். குடும்பத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிப்பார்கள். செல்வந்தராகவும், அரசு பதவியிலும் இருப்பர். கோபம், கர்வம் மற்றும் யோசிக்கும் தன்மையற்றவர்களாக இருப்பர்.


24.சதயம்
Chathayam.jpg ராசி-கும்பம்; அதிர்ஷ்ட தேவதை-சிவ பெருமான்; கணம்-ராட்சச கணம்; மிருகம்-பெண் குதிரை


இவர்கள் தர்மவானகவும், செல்வ செழிப்புடனும் காணப்படுவர். பகைவர்களால் வெல்ல முடியாத அளவு வெற்றிகரமாக வாழ்வார்கள். செய்யும் வேலலையில் முழு ஈடுபாட்டுடன் இருந்து காரியம் முடியும் வரை மற்றவைகளைப் பற்றி யோசிக்க மாட்டார்கள்.


25.பூரட்டாதி
pooratathi.jpg ராசி-மீனம்; அதிபதி-குரு; அதிர்ஷ்ட தேவதை-ஏகபாதர்; கணம்-மனிதகணம்; மிருகம்-ஆண் சிங்கம்


செல்வங்களை அனைத்து வகையிலும் சேர்ப்பதில் இவர்கள் வல்லவர்கள். நல்ல மனதுடன் கூர்மையான அறிவையும் உடையவர்கள். மனைவியின் பேச்சை மட்டுமேக் கேட்டு நடப்பார்கள். பிறருக்குச் சொந்தமானவைகளின் மீது ஆசைக் கொள்வர். இவர்களுக்கு கோபம் அதிகம் வந்தாலும் அதை வெளிப்படையாக காட்டிக் கொள்ளமாட்டர்கள்.


26.உத்திரட்டாதி
bigilaudiolaunch.jpg ராசி-மீனம்; அதிபதி-சனி; அதிர்ஷ்ட தேவதை-ஈஸ்வரர்; கணம்-தேவகணம்; மிருகம்-பெண் யானை


பேச்சில் வல்லவர்கள் மற்றும் மகிழ்ச்சியான உள்ளம் கொண்டவர்கள். இவர்களை எதிரிகளால் வெல்ல இயலாது. இறைவழிபாட்டில் நம்பிக்கை அதிகம் கொண்டவர்கள். சில சமயம் மந்தமான நிலையில் காணப்படுவர். சொல்லும் சொல்லைக் காப்பாற்ற எதையும் செய்யும் தன்மைக் கொண்டவர்கள். அமைதியான, இன்ப வாழ்க்கைக்குச் சொந்தக்காரர்கள்.


27.ரேவதி
bigilaudiolaunch.jpg ராசி-மீனம்; அதிபதி-புதன்; அதிர்ஷ்ட தேவதை-அரங்கநாதன்; கணம்-தேவகணம்; மிருகம்- பெண் யானை


நல்ல மனிதர்களாகவும், நியாயமானவர்களாகவும் இருப்பர். தன்னைப் பற்றி உயர்வாக எண்ணித் தற்பெருமைப் பேசும் பழக்கம் உள்ளவர்கள். இவர்கள் தைரியசாலிகளாக இருப்பதால் எந்த ஒரு முயற்சியிலும் எளிதில் தோல்வி அடைய மாட்டார்கள். நேர்மையாகப் பணம் சம்பாதிக்கும் குணம் உள்ளவர்கள். அழகான உடல்வாகும், வசீகரமான முகம் இவர்களுக்கு உண்டு.