நட்சத்திரங்களின் பொதுவான குண நலன்கள்

24 October 2019 ஜோதிடம்
10.மகம்
magham.jpg ராசி-சிம்மம்; கணம்-ராட்சச கணம்; மிருகம்-ஆண் எலி


இந்த நட்சத்திரம் உள்ளவர்கள் நல்ல செல்வச் செழிப்பிற்கும், அறிவிற்கும் சொந்தக்காரர்களாக இருப்பர். தருமச் சிந்தனைகள் மேலோங்கி இருக்கும். 25 வயதுக்குப் பின்னர், இவர்கள் வாழ்க்கை படிப்படியாக உயரும். ஏமாற்றும் தன்மை இருந்தாலும், இவர்களுக்குள் தலைமைப் பண்பு நிறைந்திருக்கும். வாழ்க்கையில் வளர்ச்சியை விரைவாக அடைவர்.


11.பூரம்
pooram.jpg ராசி-சிம்மம்; அதிர்ஷ்ட தேவதை-ஸ்ரீ ஆண்டாள்; கணம்-மனித கணம்; மிருகம்-பெண் எலி; அதிபதி-சுக்கிரன்


சிம்ம இராசிக்காரர்களான இவர்கள், துணிச்சலுடன் புத்திசாலித்தனத்தால், எதிகளை எளிதில் வெல்வர். எடுக்கும் முயற்சிகளில், தைரியமாக உழைத்து முன்னேற்றம் அடைவர், ஆடம்பர வாழ்க்கையில், நாட்டம் அதிகமாக இருக்கும். தெய்வ பக்தியும், அதிகம் காணப்படும்.


12.உத்திரம்
uthram.jpg ராசி-சிம்மம், கன்னி: அதிபதி-சூரியன்; அதிர்ஷ்ட தேவதை-லெட்சுமி; கணம்-மனித கணம்; மிருகம்-ஆண் பசு


சூரியன் ஆதிக்கம் உள்ள உத்திர நட்சத்திரக்காரர்கள் சிம்மம் அல்லது கன்னி இராசியைக் கொண்டிருப்பார். தர்மவானகவும், பொறுமை மற்றும் அமைதியைக் கொண்டவர்கள். கொடுத்த வாக்கைக் காப்பதில் வல்லவர்கள். தேவைக்கு ஏற்ப செல்வம் கிடைக்கும்.


13.அஸ்தம்
hastha.jpg ராசி-கன்னி; அதிபதி-சந்திரன்; அதிர்ஷ்ட தேவதை-ஸ்ரீ காயத்ரி தேவி; கணம்-தேவ கணம்; மிருகம்-பெண் எருமை


செல்வந்தராகவும், அனைவராலும் நேசிக்கப்படும் நபராகவும் இருப்பர். ஆன்மீகத்தில், அதிக ஈடுபாடு கொண்டவர்கள்.சொந்தமாகத் தொழில் செய்யும் தகுதி உடையவர்கள். மனதில் பட்டதை அப்படியே கூறுபவர்கள். தற்புகழ்ச்சிக்குச் சொந்தக்காரர்கள். மனதில் குழப்பங்கள் இருந்தாலும், சந்தோஷத்தை விரும்பி ஏற்பார்கள்.


14.சித்திரை
chitra.jpg ராசி-கன்னி, துலாம்; அதிர்ஷ்ட தேவதை-ஸ்ரீ சக்கரத்தாழ்வார்; கணம்-ராட்சச கணம்; மிருகம்-ஆண் புலி; அதிபதி-செவ்வாய்


கன்னி மற்றும் துலாம் இராசியில், சித்திரை நட்சத்திரம் காணப்படுகிறது. இவர் சிறந்த அறிவாளியாகவும், சிறந்த காரியவாதியாகளாகவும் இருப்பர். குடும்பப் பாசம் அதிகம் கொண்டவர்கள். விட்டுக் கொடுத்துச் செல்லும் சுபாவம் உடையவர்கள். மிகுதியான செல்வம் இருப்பினும் குறைவாகவே அனுபவிப்பார்கள்.


15.சுவாதி
swati.jpg ராசி-துலாம்; அதிர்ஷ்ட தேவதை-ஸ்ரீ நரசிம்ம மூர்த்தி; கணம்-தேவகணம்; மிருகம்-ஆண் எருமை


துலாம் இராசிக்காரர்களான இவர்கள் அழகாகவும், அறிவாளியாகவும் இருப்பர். இறை நம்பிக்கை உடையவர்கள். கொடுத்த வேலையை முடித்த பின்னே மற்றவைகளைப் பற்றி யோசிப்பர். தைரியமாக செயலாற்றவும் சரியான முடிவை எடுக்கும் திறமையும் உடையவர்கள்.


16.விசாகம்
vishakham.jpg ராசி-துலாம், விருச்சிகம்; அதிபதி-குரு; தேவதை-முருகன்; கணம்-ராட்சச கணம்; மிருகம்- பெண் புலி


இவர்கள் ஆன்மீக சிந்தனையையும், இறைபக்தியும், அதிகம் கொண்டவர்கள். மற்றவர்களிடம் அதிக நெருக்கம் காட்டமாட்டார்கள். முன்கோப குணம் உண்டு. தொழிலில் வெற்றியாளர்களாக விளங்குவர். அசாத்தியமான செயல்களைச் சாதாரணமாகச் செய்வார்கள். மொத்தத்தில் இவர்கள் திறைமைசாலிகளாக இருப்பர்.


17.அனுஷம்
anizham.jpg ராசி-விருச்சிகம்; அதிபதி-சனி; அதிர்ஷ்ட தேவதை-லஷ்மி நாராயணார்; கணம்-தேவ கணம்; மிருகம்-பெண் புலி


செல்வந்தர்காளவும், வெளிநாட்டில் வசிக்கும் தன்மையை உடையவர்களாகவும் இருப்பர். நல்ல பதவி, செல்வம், புகழ் உடையவர்கள். சொன்னச் சொல்லைக் காக்கும் தன்மைக் கொண்டவர்கள். மிகப் பெரியத் திறமைசாலிகாளகவும், புத்திசாலிகாளகவும் இருப்பர்.


18.கேட்டை
kettai.jpg அதிபதி-புதன்; அதிர்ஷ்ட தேவதை-ஸ்ரீ வராக பெருமாள்; கணம்-ராட்சச கணம்; மிருகம்-ஆண் மான்


எளிதில் அனைவருடனும் பழகும் தன்மை கொண்டவர்கள். அதிக நண்பர்களை பெற்றிருப்பர். தற்பெருமை குணம் அதிகம் இருக்கும், அதிகமாக விரும்பி பெண்களிடம் பழகுவர். தொழிலில் தன் அறிவால் நல்ல நிலைமையை அடைவர். பேச்சில் தேனும், செயலில் பாலுமாக அனைவரையும் எனிதில் கவர்ந்து விடுவார்.