இந்து மதத்தைப் பொறுத்த வரையில் மொத்தம் 12 இராசிகளும், 27 நட்சத்திரங்களும் கணக்கிடப்பட்டுள்ளன. ஒவ்வொரு இராசிக்கும், ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒரு சில தனிப்பட்ட குணநலன்கள் உண்டு. அவை நேரம் மற்றும் காலத்திற்கு ஏற்ப நன்மை, தீமைகளை வழங்குகிறது. இவை அனைத்துமே பிறந்த நேரத்தின் அடிப்படையிலேயேத் தீர்மானிக்கப்படுகிறது. இத்தகைய நட்சத்திரங்களின் சுபாவங்களைப் பற்றிப் பார்ப்போம்.
1.அசுவினிஇந்த நட்சத்திரத்தின் அதிபதி கேது பகவான் ஆவார். பொதுவாக இந்த நட்சத்திரக்காரார்கள் நல்ல அறிவாளிகளாகவும், ஆன்மீகச் சிந்தனை உடையவராகவும் இருப்பர். இவர்கள் எந்தத் தொழில் செய்தாலும் அதில் சிறப்பாக விளங்குவார்கள். இந்த நட்சத்திரக்காரர்கள் செல்வந்தர்களாகவே இருப்பார்கள்.
2.பரணிஇந்த நட்சத்திரக்காரர்களின் அதிபதி சுக்கிரன் ஆவார். இவர்கள் பொதுவாக பணம், செல்வம் பற்றிய சிந்தனையும் செயலையும் உடையவர்கள். இந்த நட்சத்திரக்கரார்கள் கேளிக்கைகளில் அதிக நாட்டம் கொண்டிருப்பர். எளிதான முறையில் செல்வம் ஈட்டுவதே இவர்களின் பழக்கமாகவும், குறிக்கோளகவும் இருக்கும். குறிப்பாக, இவர்கள் அதிர்ஷ்டத்திற்குச் சொந்தக்காரர்கள் ஆவர்.
3.கார்த்திகைஇந்த நட்சத்திரம் மேஷம் மற்றும் ரிஷப இராசிக்கு உரியதாகும். இந்த நட்சத்திரத்தின் அதிபதி சூரியன் ஆவார். இவர்கள் சுயநலவாதியாகவும் மிகவும் கஞ்சத்தனமாகவும் இருப்பர். இவர்களுக்கு மற்றவர்களை மதிக்கும் தன்மை இருக்காது. தலைமைப் பண்புகளும் ஒரு சிலருக்கு இருக்க வாய்ப்புண்டு.
4.ரோகினிஇந்த நட்சத்திரத்திற்கான இராசி ரிஷபம் ஆகும். சந்திரன் இந்த நட்சத்திறத்திற்கு அதிபதி ஆவார். பொதுவாக இவர்கள் அழகான உடலமைப்பும், கம்பீரமான தோற்றமும் கொண்டவராக இருப்பர். தேவை என்றால் மட்டும் பேசும் குணம் கொண்டவர்கள். நல்ல தன வரவு இவர்களுக்கு இருக்கும்.
5.மிருகசீரிசம்இந்த நட்சத்திரமானது ரிஷப மற்றும் மிதுன இராசிகளின் கோணங்களில் காணப்படுகிறது. இவர்கள் எடுக்கும் முடிவுகள் சரியானதாகவே இருக்கும். இவர்கள் பெண்களிடம் விரும்பி அதிகம் பழகும் சுபாவம் கொண்டவர்கள். இவர்கள் அடுத்தவர்களின் பொருள்களை அபகரிப்பவர்களாகவும், அதன் மீது ஆசைப்படுபவர்களாகவும் இருப்பர்.
6.திருவாதிரைஇதன் ராசி மிதுனம் ஆகும். ராகு பகவானே இந்த நட்சத்திரத்தின், நட்சத்திர அதிபதி ஆவார். இவர்கள் பொதுவாக, புத்திசாலிகளாக இருப்பர். அதிகமாகக் கோபப்படுதலும், உண்மைக்குப் புறம்பாக இருப்பதும் இவர்களின் சுபாவமாக இருக்கும். இவர்கள் தனது 25வது வயதில் இருந்து, வெற்றிகரமான வாழ்கையை வாழ ஆரம்பிப்பார்கள்.
7.புணர்பூசம்இந்த நட்சத்திரமானது மிதுனம் மற்றும் கடக இராசிக்கு சொந்தமானது ஆகும். குரு பகவானை நட்சத்திர அதிபதியாகப் பெற்ற இவர்கள் மிகப் பொறுமைசாலிகளாகவும், அமைதியான சுபாவம் உடையவர்களாகவும் இருப்பர். இவர்களின் மனதில் மகிழ்ச்சியும், அமைதியும் நிலைத்திருக்கும். இளம் வயதில் திருமணம் நடக்க வாய்ப்புண்டு. சமூகத்தில் நல்ல மதிப்பு இருக்கப் பெறுவார்கள்.
8.பூசம்இந்த நட்சத்திரம் கடக ராசிக்கு சொந்தமானதாகும். இவர்கள் திறைமைசாலிகளாகவும், புத்திசாலிகளாகவும், உறுதியனவர்களாகவும் இருப்பார்கள். ஆன்மீக நாட்டமும், அறிவும் அதிகம் கொண்டவர்கள். சிலருக்குத் திருமணம் தாமதமாக நடக்க வாய்ப்புண்டு. சிலர் அதிகமாக உணர்ச்சி வசப்படக் கூடியவர்களாக இருப்பர். கொடுத்த வேலையைக் கட்சிதமாக முடிப்பதில் இவர்கள் வல்லவர்கள்.
9.ஆயில்யம்இந்த நட்சத்திரம் ஒரு முழு நட்சத்திரம் ஆகும். பணத்தை அதிகமாகச் செலவழித்தாலும், இவர்கள் பணக்காரர்களாகவே இருப்பர் சுயநலம் இவர்களிடம் அதிகம் காணப்படும். தீங்கு விளைவிக்கக் கூடியப் பழக்க வழக்கங்களைக் கொண்டிருப்பர். வாழ்க்கையின் கடைசியில் முன்னேற்றம் அடைவர்.