நம் வாழ்க்கையில் நிகழும் ஒவ்வொரு நிகழ்வும் நம்முடைய பிறந்த நேரத்தை பொறுத்தே நிகழ்கிறது. நம் பிறந்த நேரத்தின் அடிப்படையிலேயே நம்முடைய ஜாதகமும் எழுதப்படுகிறது. இதை வைத்தே நாம் பிறந்த நேரத்தின் முக்கியத்துவத்தை அறியலாம். மேலும், இந்து மத அடிப்படையில் ஒவ்வொரு நேரத்திற்கும் ஒவ்வொரு பலன் உண்டு. அந்நேரத்தில் பிறந்தவர்கள் அத்தகையப் பலன்களையேப் பெரும்பாலும் அடைகின்றனர்.
சந்திரனின் உச்சகட்ட சக்தியில் பிறந்த இவர்கள் மிகவும் புத்திசாலியாக இயற்கையிலேயே இருப்பார்கள். பயணங்களையும் சாகசங்களையும் விரும்பிச் செய்யும் சுபாவம் உடையவர்.
இந்நேரத்தில் பிறப்பவர்கள் செல்வந்தர்களாகவும், வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர்களாகவும் இருப்பர். ஆடம்பர வாழ்க்கையில் அதிக நாட்டம் உடையவர்களாக இருப்பர்.
பிரம்மமுகூர்த்தம் எனப்படும் நேரத்தில் பிறந்த இவர்கள் மிகவும் சுறுசறுப்பாகவும் உழைக்கும் வர்க்கமாகவும் இருப்பர். நல்ல மனிதர்களாக சமூகத்தில் வாழ்வர்.
இந்த நேரத்தில் பிறந்தவர்கள் மிகவும் சாந்தமான மனநிலையுடனும் அமைதியாகவும் இருப்பர். நல்ல மனிதர்களாக இருந்தாலும் சோம்பேறித்தனம் அதிகம் காணப்படும்.
நல்ல வாழ்க்கையை எந்த ஒருக் குறையுமின்றி வாழ்வர். இருப்பினும் ஏதோ ஒன்றை இழந்தது போன்ற உணர்வுடன் இருப்பர்.
இவர்கள் எடுத்த காரியம் கைகூடும் வரை விடாமல் உழைப்பர். நம்பிக்கைக்குச் சொந்தக்காரர்களான இவர்கள் கடுமையான உழைப்பாளிகளாக இருப்பர்.
சூரியன் உச்சத்தில் இருக்கும் பொழுதுப் பிறக்கும் இவர்கள் பெரும்பாலும் அதிகமாக ஊர் சுற்றுவதில் ஆர்வமுடையவர்களாக இருப்பர். இவர்கள் வாழ்க்கையும் பயணத்தைச் சார்ந்தே இருக்கும்.
நேர்மையாக வாழ விரும்பும் இவர்களுக்கு வணிகம் மற்றும் பங்கு வர்த்தகம் வெற்றிகரமானதாக அமையும்.
கடமை, கண்ணியம், கட்டுப்பாடு என வாழும் இவர்கள், மனிதர்களுக்கே முக்கியத்துவம் தருவர். பணம் இரண்டாம்பட்சம்தான். கல்யாணத்திற்குப் பின் ஒளிமையமான எதிர்க்காலத்தை அனுபவிப்பர்.
குடும்ப உறவில் நம்பிக்கை இல்லாத இவர்கள் தன்னுடைய நண்பர்கள் மற்றும் உறவில்லாத மனிதர்களிடமே அதிகம் தன் நேரத்தைச் செலவழிப்பர். மகிழ்ச்சியாக வாழ்வதை மட்டுமே விரும்புபவர்.
இந்நேரத்தில் பிறந்தவர்கள் பெரும்பாலும் கலைத் துறையில் சாதிக்க ஆசைப்படுவர். இவர்களிடம் அறிவும், திறமையும், கற்பனையும் அதிகளவில் இருக்கும்.
சந்திரனைப் போல ஏற்ற இறக்கம் இரண்டையும் சமமாக உள்ள வாழ்க்கையையே வாழ்வர். இவர்கள் எதையும் தாங்கும் இதயம் உடையவராக இருப்பர்.