எண்-6ல் பிறந்தவர்களை ஆளப் பிறந்தவர்கள் எனக் கூறலாம். தலைமைப் பண்பும், மற்றவர்களைக் கட்டுபடுத்தும் குணமும் உடையவராக இருப்பீர்கள். இவர்கள் அன்பாகவும், அறிவுள்ளவராகவும் இருப்பார்கள்.
அனைவரிடத்திலும் நல்ல மரியாதையுடன் பழகக்கூடியவர்கள். கலைத்துறையில் ஆர்வம் அதிகமுள்ளவராகக் காணப்படுவர். எண்-6 சுக்கிரனின் அருள் பெற்றது. முகப்பொழிவும், அழகும் இவர்களுக்கு இயற்கையாகவே இருக்கும். சமூகத்தில் புகழடையக் கூடிய வாய்ப்புகள் மற்றவர்களை விட இவர்களுக்கு அதிகம் உள்ளது. தனிமையை விரும்பும் பழக்கமுடையவர்கள். வசதியான வாழ்க்கையை வாழ ஆசைப்படுவர்.
இவர்கள் வாழ்வில் காதல் ஒரு முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும். நீங்கள் தொட்ட காரியங்கள் அனைத்தும் வெற்றிப் பெறும். பணியில் அதிக நாட்டம் அதிகம் காணப்படும். தெய்வ பக்திமிக்கவராக இருப்பர். சோம்பலைத் தவிர்ப்பது விரைவான வளர்ச்சிக்கு வழி வகுக்கும். பலத் தடைகளை தாண்டிய பின் உயர்ந்த வாழ்க்கைக் கிடைக்கும்.
7-ம் எண்ணில் பிறந்தவர்கள் அறிவுக் கூர்மை உடையவராகவும், தத்துவ ஞானிகளாகவும் இருப்பர். உங்களுக்கு வெற்றி என்பது பல கஷ்டங்களுக்குப் பிறகே கிட்டுவதால் அதைப் பெரும்பாலம் கொண்டாடுவதில்லை. எண் 7-ல் பிறந்தவர்கள் அதிகத் தூரம் பயணிக்க வேண்டும் என்ற ஆசையுடையவர்கள். இவர்களுக்கு மார்க்கெட்டிங் துறையில் வாய்ப்புக் கிடைத்தால், உயர்வான வாழ்க்கை அமையும்.
துணிவாகப் பேசும் திறனும், நேர்மையும் இவர்களிடம் அதிகமாகப் பளிச்சிடும். நண்பர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடியவராகவும் இருப்பர். காதலில் கவனமாக இருப்பது நல்ல வாழ்க்கையைக் கொடுக்கும். காதல் வாழ்க்கை இனிமையாக அமைவது கடினம். ஒரு வேளை அமைந்துவிட்டால், வாழ்வின் பிற்பகுதியில் நல்ல நிலைமையை அடைவர்.
தனக்காக மட்டும் இல்லாமல், பிறரின் வெற்றிக்காகவும் உதவும் மனம் படைத்தவர்கள். புறம் கூறுவது ஏழாம் எண்ணில் பிறந்தவர்களுக்குப் பிடிக்காது, பிறரை சிரிக்க வைத்துக் காரியம் சாதிப்பதில் வல்லவர்கள்.
கஷ்டங்களை மறைத்துப் புன்னகையைப் பிறர்க்கு பரிசளிப்பர். நண்பனின் சுக துக்கத்தைப் புரிந்து நடப்பர். நல்ல நண்பர்கள் கிடைப்பது இந்த எண்ணில் பிறந்தவர்களுக்கு, மிகக் கடுமையானதாக இருக்கும். ஒரு சிலரே நம்பத் தகுந்த நண்பர்களாக இருப்பார்கள். உங்கள் வெற்றிக்கு குடும்பமும், நண்பர்களும் உறுதுணையாக இருப்பார்கள்.
8, 17 மற்றும் 26-ம் தேதிகளில் பிறந்தவர்களின் குணநலன்கள்8-ம் எண் சனிக் கிரகத்தின் ஆசி பெற்றது. நீங்கள் அதிர்ஷ்டம் இல்லாதவர்கள் எனப் பிறர் எண்ணுவர். உங்களின் தலைமையின் கீழ் செயல்படுவது அனைவருக்கும் நல்லது. ஆரம்ப கால வாழ்க்கையில் சிரமப்பட்டாலும், பின்பு நல்ல எதிர்காலம் இவர்களுக்கு உண்டு.
8-ஆம் எண் எதையும் செய்யக் கூடிய ஆற்றலுடையது. தோல்விகள் அதிகம் ஏற்படுவதால், தலைமைப் பண்பு இவர்களிடம் அதிகமாக நிறைந்துக் காணப்படும். காதலில் தோல்வி ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். நல்ல உயர் பதவியில் அல்லது நல்ல தலைமைப் பொறுப்பில் இருப்பர். அதற்கேற்பப் பணிச்சுமையும் அதிகரிக்கும்.
உங்களை நேரில் வெல்வது நடக்காதக் காரியம் என்பதால், உங்கள் முதுகில் குத்தும் வாய்ப்புகள் அதிகம். எதையும் விரைவாகப் புரிந்து நடக்கும் பழக்கம் உள்ளதால், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் சொல்வதைக் கேட்டு நடப்பது நல்லது. வாழ்க்கையில் விரக்தி ஏற்பட்டால், பல சட்டவிரோத செயலில் கூட ஈடுபட நேரிடலாம். உங்களின் நல்ல எண்ணமே உங்களைக் காப்பாற்றும். விதியை யாராலும் மாற்ற இயலாது, என்பதை உணர்ந்தவர்கள் இவர்கள். கடவுளின் நம்பிக்கையும், நல்ல எண்ணமும் உங்கள் வாழ்வை வசப்படுத்தும்.
எண்-9 வியாழன் கிரகத்திற்குச் சொந்தமானது. இவர்ககள் நாட்டிற்காக சண்டையிடக் கூடிய போர் வீரர்களாக இருப்பார்கள். எந்த ஒரு பிரச்சனையும் எதிர்கொண்டு அதில் வெற்றியும் அடைவார்கள். டாக்டர் மற்றும் வழக்கறிஞராவதற்கு வாய்ப்புகள் அதிகம். இயற்கையிலேயே போர் குணம் உடையவராக இருப்பர்.
எண்-9ல் பிறந்தவர்கள், தனித்துவம் மிக்கவராக இருப்பர். இவர்கள் செய்யும் செயல்கள் அனைத்தும் மிகவும் தனித்தன்மை வய்ந்தது. வாகனம் ஓட்டும் போது கவனம் தேவை. இவர்கள் 1-ம் எண் உடையவரை நம்புவர். சாதிப்பதற்காகவே பிறந்த இவர்களின் வாழ்க்கைக் கடினமாக இருந்தாலும், கிடைக்கும் சிறிய சந்தோஷத்தைப் பெரிதாக மதிப்பர். பொறுமை இவர்களுடன் பிறந்தது. ஏழ்மையை எதிர்த்து உயர்வை அடைவர்.
காதலில் தோல்வி ஏற்படுடலாம். ஆனால், அதை நினைத்து வருந்த வேண்டாம். வெற்றிகரமான வாழ்க்கையை இறைவன் அளிப்பார். யாராலும் தாங்க இயலாத மிகவும் கடினமான சூழ்நிலைகளை எளிதாகக் கையாளும் தன்மை இவர்களிடத்தில் இயற்கையாகவே இருக்கும்.