எண் கணிதப் பலன்கள்!

24 October 2019 ஜோதிடம்

நாம் ஏற்றுக் கொண்டாலும், ஏற்றுக் கொள்ளாவிட்டாலும், ஒரு சில விஷயங்கள் நம்மோடும், நம் வாழ்க்கையோடும் ஒத்துபோய் விடுகின்றன. அவைகளில் ஜாதாகமும், ஜோசியமும் அடங்கும். பல ஜோசிய முறைகள் இருப்பினும், அனைவருக்கும் பொருந்தக்கூடிய ஒரு முறையாக எண்கணிதம் இருந்து வருகிறது.

1, 10, 19 மற்றும் 28-ம் தேதிகளில் பிறந்தவரின் குணநலன்கள்
1.jpg
எண்-1 "இவர்கள் வியாபாரம் மற்றும் வணிகத்தின் சொந்தக்காரர்கள் ஆவர்".

பொதுவாக பிறந்த தேதியின் கூட்டுத்தொகை 1 எனில், அவர்கள் தலைமைப் பண்பிற்கு சொந்தக்காரர்களாகவே இருப்பர். இவர்களுக்கு அரசாங்க உதவிகள் அனைத்து வகையிலும் கிடைக்கும். இவர்கள் சுயமாரியாதை மற்றும் கௌரவத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிப்பர். எவ்வளவு தோற்றாலும், வெற்றி பெறும் வரை மனம் தளராமல் போராடும் குணம் இவர்களிடத்தில் காணப்படும். இவர்களுக்கு, எப்பொழுதுமே அரச உதவியும், ஆதரவும் உண்டு என்பதால் இவர்கள் துணிந்து அரசியலில் இறங்கினால் கண்டிப்பாக ஜெயமே.

இவர்கள் நேர்மையாகவும், உண்மையாகவும் இருக்கும்பட்சத்தில் இவர்களால் வணிகம் மற்றும் ரியல் எஸ்டேட் எனப்படும் வீடு, மனை, வாங்கி விற்கும் தொழில்களில் நல்ல நிலைக்குச் செல்ல முடியும்.

எண் 1-ல் பிறந்தவர்கள் மனதிற்கும், அறிவுக்கும் பாலமாக இருப்பதால் அவர்களால் புகழ் பெற்ற ஆசிரியர்களாகவோ (அ) மதப்போதகராகவோ பிரகாசிக்க இயலும். குறிப்பாக இவர்களுக்கு சகிப்புத் தன்மையும், பொறுமையும் அதிகம் இருப்பதால் மருத்துவத் துறையில் எளிதாக நற்ப்பெயரை பெற இயலும்.


2, 11, 20 மற்றும் 29-ல் பிறந்தவர்களின் குணநலன்கள் 2.jpg
"எண்-2 அழகும், அன்பும் இவர்களுக்குச் சொந்தமானது"

ஒரு வார்த்தையில் விவரிக்கவேண்டுமானால், இவர்களைச் சமாதான விரும்பிகள் எனக் கூறலாம். எண் 2-ல் பிறந்தவர்கள் சந்திரனின் ஆசிப் பெற்றவர்கள். எப்படி நிலாவானது, வளர்ந்து கொண்டும், மறைந்துகொண்டும் இருக்கிறதோ, அதே போல இவர்களுடைய எண்ணங்களும் இருக்கும்.

உங்களுடைய நல்ல சிந்தனைகள் உங்களை நல்வழிபடுத்தும். நீங்கள் உங்கள் எண்ணங்களைத் தவறாக உபயோகித்தால், அது பல இன்னல்களை உங்களுக்கு அளிக்கும். நீங்கள் இறைவன் அளித்த அறிவாற்றலைப் பயன்படுத்தினால், நல்ல படைப்பாளிகாளாக திகழ வாய்ப்புகள் உண்டு. நீங்கள் இயல்பாகவே இடத்திற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்ளக் கூடிய தன்மை உடையவர்கள்.

வியாபாரத்தில் திறமை உடையவர்களாகவும், எளிதில் அனுகக் கூடியவராகவும் இருப்பீர்கள். நீங்கள் எவ்வளவு சந்தோஷம் அடைகிறீர்களோ, அதற்கேற்ப சோகமும் உங்களுக்குள் இருக்கும். குழப்பமான மன நிலையிலேயே எப்பொழுதும் இருப்பீர்கள். அனைவரின் மீதுள்ள நம்பிக்கையே நீங்கள் ஏமாறக் காரணமாக அமையலாம். எனவே சாமர்த்தியமாக நடந்துகொள்வதன் மூலம் வெற்றிகரமான வாழ்க்கையை வாழ இயலும்.


3, 12, 21 மற்றும் 30-ல் பிறந்தவர்களின் குணநலன்கள்
3.jpg
எண்-3 "தன்னம்பிக்கையும், கடினஉழைப்பும் உங்களின் தனி அடையாளம் ஆகும்".

எண் 3-ல் பிறந்தவர்கள் பொதுவாக பிறரிடம் எளிதாகப் பழகக் கூடியவர்கள். குரு பகவானே 3-ம் எண்ணை ஆட்சி செய்கிறார். எனவே, பல்வேறு நலன்கள் இவர்களின் வாழ்க்கையில் ஏற்பட வாய்ப்புள்ளது.

நீங்கள் அறிவாளிகளாகவும், பறந்த மனம் படைத்தவராகவும் மற்றும் சேவை செய்யும் மனப்பான்மை உடையவர்களாகவும், இருப்பீர்கள். நீங்கள், தியாகம் செய்யும் உள்ளத்தைக் கொண்டவர்களாக இருப்பீர்கள். வாக்குவாதத்தில் ஈடுபடும் தன்மை அதிகமாக காணப்படும். இவர்கள் உளவியல் சார்ந்தத் துறைகளில் அதிகளவில் பிரகாசிக்க வாய்ப்புகள் அதிகம். கடவுள் நம்பிக்கையுடையவர்களாக இருப்பீர்கள்.

தெளிவான முடிவை எடுக்க முடியாமல் குழப்பத்திலேயே இருப்பீர்கள். பிறரிடம் உதவி கேட்க தயங்குவீர்கள் எனினும் யாராவது உதவி எனக் கேட்டால் யோசிக்காமல் இருக்கும் நிலையில் இருந்து, இறங்கி வந்து உதவும் சுபாவம் உடையவர். உங்களின் செயலைக் கொண்டே உங்கள் மரியாதை அதிகரிக்கும். நீங்கள் எதற்கும், எப்போதும் தயாராக இருப்பீர்கள்.


4, 13, 22 மற்றும் 31-ம் தேதிகளில் பிறந்தவர்களின் குணநலன்கள்
4.jpg
எண்-4 "ஆளுமை திறன் உடையவராக இருப்பர்"

எண் 4-ல் பிறந்தவர்கள், பொதுவாக அறிவாளியாக மட்டுமின்றி நல்லத் திறமைசாலியாகவும் இருப்பார்கள். எண் 4-ராகுவின் பார்வை விழுகின்ற ஒரு எண் ஆகும். ஆதலால் இவர்கள் அனேகத் துறைகளில் வெற்றியடையக் கூடியவர்களாக இருப்பார்கள். எல்லா விஷயங்களிலும் ஈடுபடக்கூடியவராகவும் இருப்பர்.

அரசியல் மற்றும் சமூக அக்கறை உடையவராக திகழ்வர். இவர்கள் மனநிலை மற்றவருடன் எளிதில் ஒத்துப்போகும் தன்மையை இயற்கையாகவே உடையது. யாருக்காகவும் இவர்களுடையப் பழக்க வழக்கங்களை மாற்றிக் கொள்ளமாட்டார்கள். ஆனால், மாற்றத்தை அதிகம் விரும்பும் சுபாவம் உடையவர்.

இவர்கள் வாழ்வில் திடீர் அதிர்ஷ்டம் ஏற்பட்டு, அதனால் நல்லப் பலன்களையும் அடையக் கூடிய சாத்தியங்கள் அதிகம். ஒரு நிறுவனத்தை ஆளக்கூடிய தகுதி உடையவராகவும் இருப்பர். பெரிய நட்பு வட்டாரங்கள் அதிகளவில் காணப்படும். இவர்கள் சாந்தமானவராக இருப்பது உங்களுடைய இயற்கையான குணம் ஆகும்.


5, 14 மற்றும் 23 தேதிகளில் பிறந்தவர்களின் குணநலன்கள்
5.jpg
எண்-5 "இவர்களை அதிர்ஷ்டத்திற்குச் சொந்தக்காரர்கள் எனக் கூறினால் அது மிகையாகாது"

எண் 5-க்கு சொந்தக்கரார்கள், சாகச குணம்கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் புதனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள். எதிலும் சளைக்காமல் உழைக்கும் தன்மை உடையவர்கள். தன்னால் முடியாதது ஒன்றுமில்லை, என்று நினைக்கக் கூடியவர்கள்.

கடின உழைப்பாளிகளாகவும், சமூகத்தில் நல்ல மதிப்புடையவராகவும் இருப்பீர்கள். நீங்கள் அடுத்தவருக்கு யோசனை கூறுவதில் வல்லவர்கள். மிகக்கடினமான சூழ்நிலையை எளிதாகக் கையாளக் கூடியவர்கள். சொந்தத் தொழில் செய்து உயர்வை அடைவர்.

புது புது விஷயங்களில் நாட்டம் உடையவராக இருப்பீர்கள். வாழ்வில் முன்னேற்றத்தை மட்டுமே விரும்புவீர்கள். அடுத்தவரை கவர்ந்திழுக்கும் சக்தி இயற்கையாகவே இவர்களிடம் அதிகம் உள்ளது. எண்-5ல் பிறந்தவர்களை அதிர்ஷ்டத்திற்குச் சொந்தக்காரர்கள் எனச் சொல்லலாம்.