சந்திர கிரகணம் என்ன செய்யலாம்? என்ன செய்யக் கூடாது?

24 October 2019 சாஸ்திரம்
lunareclipse.jpg

பூமியானது, சூரியனுக்கும் சந்திரனுக்கும் இடையில் வரும் நாள் சந்திர கிரகணம் எனப்படுகிறது. அப்பொழுது, பூமியின் நிழல் நிலவின் மேல் விழும். அப்பொழுது நிலவானது கருப்பு நிறமாக மாறும். ஒவ்வொரு நேரம் அது சிவப்பு நிறங்களில் மாறுகிறது.

முழுமையான சந்திரகிரகணத்தை பூரண கிரகஸ்தம் என்றும், பாதி கிரகணத்தை பார்சுவ கிரகஸ்தம் என்றும் கூறுகின்றனர். அதே போல ராகுவினால் ஏற்படும் சந்திர கிரணத்தை ராகு கிரகஸ்தம் என்றும், கேது பகவானால் ஏற்படும் கிரகணத்தை கேது கிரகஸ்தம் என்றும் அழைக்கின்றனர்.

சுவர்பானு தேவர்களைப் போன்று விஷ்ணு மோகினியாக மாறி, வழங்கிய அமிர்தத்தை பருகிவிடுகிறார். இதன் பார்த்த சூரியனும், சந்திர பகவானும் விஷ்ணுவிடம் கூற, விஷ்ணு தன்னுடைய சுதர்சனத்தை ஏவ, அது சுவர்பானுவின் தலையை வெட்டி விடுகிறது. இதன் காரணமாக, தலை வேறு முண்டம் வேறாக மாறிவிடுகிறார் சுவர்பாணு. அமிர்தத்தை பருகியதால் உயிர் பிரியவில்லை. ஈசனை வேண்டி தவம் செய்கிறார். ஈசனும் மனம் இறங்கி வந்து, அவர்களுக்கு நவக்கிரக அந்தஸ்த்தை அடைகிறார். அதே போல், காட்டிக் கொடுத்த சூரியனையும், சந்திரனையும் பிடிப்பதற்கு சிவபெருமானும் குறிப்பிட்டக் கால அவகாசம் வழங்குகிறார். இதன் காரணமாக, சூரியனையும், சந்திரனையும் ராகு பிடிக்கின்றார். அப்பொழுது, சூரியனும், சந்திரனும் விஷ்ணு பகவானைப் பார்த்து வேண்ட, அவர் இவர்களை ராகுவிடம் இருந்து காக்கின்றார் என, புராணங்கள் விவரிக்கின்றன.

அதே சமயம், கிரகண காலங்களில், கோவில்களின் நடைசாற்றப்படுகிறது. ஆனால், வீட்டில் இறைவழிபாடு செய்யலாம். உண்மையைக் கூற வேண்டும் என்றால், இந்த நேரத்தில் வழிபாடு செய்யும் பொழுது, ஒரு முறை ஓம் நம சிவாய என்று கூறுவது பல ஆயிரம் முறைக் கூறுவதற்கு சமமாகும். இந்தக் காலக்கட்டங்களில் பல விஷயங்களை செய்வதற்கும், செய்யாமல் இருப்பதற்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அவைகளைப் பற்றிப் பார்ப்போம்.

செய்யக் கூடியவை

வீட்டில் இறைவழிபாடு, தியானம் செய்தல் ஆகியவைகளில் ஈடுபடலாம்.

கிரகணம் முடிந்ததும், மூதாதையர்களுக்கு தர்ப்பணம் செய்யலாம்.

கிரகணம் முடிந்ததும், குளித்துவிட்டு ஆலயம் சென்று விளக்கு ஏற்றி வழிபடுவது, பல விதங்களில் நன்மை அளிக்கக் கூடிய விஷயமாகும்.

வெளியில் சென்றேத் தீர வேண்டும் என நினைப்பவர்கள், அணிந்திருக்கும் துணியில், சிறிதளவு பச்சரிசி முடிந்து வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர், கிரகணம் முடிந்ததும், அதனை நீரோடையில் விட்டுவிட வேண்டும்.

சமைத்த உணவுப் பொருட்களில், தர்ப்பைப் புல்லை போட்டு வைப்பது நல்லது.

செய்யக் கூடாதவை

கர்ப்பிணிப் பெண்கள் வெளியில் செல்லக் கூடாது.

நீராடக் கூடாது.

கோவிலுக்குச் செல்லக் கூடாது.

உடலுறவு செய்யக் கூடாது.

மனநிலைப் பாதிக்கப்பட்டவர்கள், கர்ப்பிணிப் பெண்கள், கன்னிப் பெண்கள் வெளியில் செல்லக் கூடாது.

கிரக நேரத்தில் புதிதாகப் பூச் சூடக் கூடாது.

சாப்பிடக் கூடாது.

புணர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், அனுசம், கேட்டை, உத்திரட்டாதி மற்றும் ரேவதி நட்சத்திர்க்காரர்கள், இறை வழிபாடு செய்ய வேண்டும்.

தொடர்ந்து விஷ்ணு சஹாஸ்ரநாமம், சிவபுராணம் போன்ற, இறைவனுடையப் பாடல்களை பாராயணம் செய்ய வேண்டும்.

இவைகளை சந்திர கிரகண நேரத்தில் செய்தால், இறைவனின் அருளைப் பெற முடியும்.