தைப்பூசத் திருவிழா கோலாகலம்! முருகனின் கோயில்களில் பக்தர்கள் குவிந்தனர்!

10 February 2020 ஜோதிடம்
fullmoonlatest1.jpg

நவக்கிரகங்களில் மிகவும் அழகானவர் என்றால், அது சந்திர பகவான் மட்டுமே. அவரே, அனைவருடைய ராசியினையும் தீர்மானிப்பவர். அவர் இருக்கும் இடத்தினைப் பொருத்தே, நம்முடைய ராசியானது நிர்ணயிக்கப்படுகின்றது. அவர் உங்கள் ஜாதகத்தில் எந்த ராசிக் கட்டத்தில் நிற்கின்றாரோ, அது தான் உங்களுடைய ராசி ஆகும். அவர் ரோகிணி, ஹஸ்தம் மற்றும் திருவோண நட்சத்திரங்களின் அதிபதி ஆவார்.

சந்திரனை அரை பாவர் மற்றும் அரை சுபர் என அழைக்கலாம். காரணாம், வளர்பிறையில் அவர் சுப பலன்களை அள்ளித் தருவார். பௌர்ணமிக்குப் பிறகு, வரும் தேய்பிறையில் அவர் அசுப பலன்களை கொடுக்க வல்லவர். ஒருவர் ஜாதகத்தில், வளர்பிறையில் சந்திரன் இருந்தால், அவர் அந்த ஜாதகத்தில் சுபர் என்றும், தேய்பிறை நிலையில் இருந்தால், அவர் அசுபர் என்றும் அழைக்கப்படுகின்றார். திங்கட் கிழமை சந்திரனுக்கு உரிய நாள். அன்று சிவ பெருமானை, வணங்குவது சிறப்பு. அதே போல், சந்திரனின் அதிதெய்வமாக பார்வதி தாயார் இருக்கின்றார்.

மனதுக்கு காரகத்துவம் பெறுகின்றார் சந்திரன். அதே போல், தாய்க்கும் அவரே கரகத்துவம் உடையவர் ஆவார். முக அழகு, பெண்கள் மூலம் லாபம், நீர் சம்பந்தப்பட்ட பொருட்கள் முதலியவைகளுக்கும் சந்திரனே கரகத்துவம் உடையவர் ஆவார். சந்திரனுக்குரிய நவரத்தினமாக முத்து உள்ளது. சந்திரகாந்த கல் உப ரத்தினமாக உள்ளது. வெள்ளைக் குதிரை சந்திரனின் வாகனம் ஆகும்.

சந்திரனின் ஆட்சி வீடாக, கடகம் இருக்கின்றது. அவரின் உச்ச வீடாக ரிஷபமும், நீச்ச வீடாக விருச்சிகமும் இருக்கின்றது. சந்திரனுக்கு முதல் விரோதி என்றால் அது சனி பகவான் ஆவார். குருவிற்கு, ஐந்து, ஏழு மற்றும் ஒன்பதாம் வீடுகளில் இருக்கும் பொழுது, சந்திரன் பல அற்புத பலன்களை வாரி வழங்குவார் என ஜோதிட குறிப்புகள் கூறுகின்றன. சந்திரனை, பார்க்கும், சேரும் கிரங்களைப் பொருத்து, சந்திரன் வலிமை குறிப்பிடப்படுகின்றது. சந்திரன் இருக்கும் இடத்திற்கு 12ம் இடத்தில் சனி வந்து நிற்கும் காலம், ஏழரைச் சனி ஆரம்பிக்கும் காலம் ஆகும். ராசியில் இருந்து இரண்டாம் இடத்தினை விட்டு, விலகும் காலம், ஏழரைச் சனி முடியும் காலம் ஆகும்.

சந்திர பகவான், உங்கள் லக்கனத்தில் நின்றால், முகத்தில் வசீகரம் அதிகமாகவே இருக்கும். கருப்பாக இருந்தாலும், கலையாக இருப்பர். பெண்கள் மூலம், லாபம் உண்டாகும். திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும். காம சுகத்தின் மீது, அதிக ஈடுபாடு உண்டாகும். ஈடுபடும் பந்தயங்களில் வெற்றி கிடைக்கும். மென்மையான மனம் படைத்தவர். திடீர் பண வரவு, திடீர் வெற்றிகள் உண்டாகும்.

சந்திரன் உங்கள் ஜாதகத்தில், லக்கனத்தில் இருந்து இரண்டாம் இடத்தில் இருந்தால், மென்மையானப் பேச்சு வெளிப்படும். நல்ல வருமானம் உண்டாகும். குடும்பத்தினர் மீது, அன்பாக இருப்பர். நல்ல கல்வி அறிவு உண்டாகும். ஆயுள் அதிகரிக்கும். இதுவே, சந்திரன் சுப வலு குன்றி இருந்தால், செல்வ இழப்பு, குடும்பத்தால் மன உளைச்சல், புகழ் இழப்பு முதலியவை உண்டாகும்.

சந்திரன் உங்கள் ஜாதகத்தில் மூன்றாம் இடத்தில் இருந்தால், உடல்வலிமையும், நல்ல உடல் சக்தியும் உண்டாகும். சகோதரரின் ஆதரவு கிடைக்கும். மகிழ்ச்சியான வாழ்க்கை அமையும். அதிகளவில், சிறிய பயணங்கள் உண்டாகும். நல்ல வாகன வசதி உண்டாகும். மாமனார் வழி ஆதரவு உண்டாகும். இதுவே, சந்திரன் அசுப நிலையில் இருந்தால், இவைகளுக்கு எதிர்மறையாக நடைபெறும்.

சந்திரன் உங்கள் ஜாதகத்தில் நான்காம் இடத்தில் இருந்தால், மகிழ்ச்சியான வாழ்வு அமையும். தாயின் ஆதரவு முழுமையாக கிடைக்கும். நீர்நிலைகளின் அருகில், வீடுகள் அமையும். தாய் வழி சொத்து, தாயின் மூலம் லாபம் முதலியவை உண்டாகும். நல்ல கல்வி அறிவு கிடைக்கும். ஒழுக்கமாக இருப்பர். சந்திரன், அசுப நிலையில் இருந்தால், இவைகளுக்கு எதிர்மறையாக நடக்கும்.

சந்திரன் உங்கள் ஜாதகத்தில், ஐந்தாம் இடத்தில் இருந்தால், பணம் வந்து கொண்டே இருக்கும். நல்ல நண்பர்கள் கிடைப்பார்கள். நல்ல அறிவாற்றல் உண்டாகும். அதிர்ஷ்டம் எப்பொழுதும் இருக்கும். பெண் குழந்தைகள் அதிகம் பிறக்கும். சந்திரன் கெட்ட நிலையில் இருந்தால், இதற்கு எதிர்மறையாக நடக்கும்.

சந்திரன் உங்கள் ஜாதகத்தில் ஆறாம் இடத்தில் இருந்தால், சுகமான வாழ்வு அமையும். எதிரிகள் வந்து கொண்டே இருப்பர். ஜாதகரின் செயலால் எதிர்ப்புகள் உருவாகும். இளமைக் காலத்தில் கஷ்டப்பட்டாலும், பிற்காலத்தில் நல்ல விதத்தில் வாழ்வர். அடுத்தவருக்கு கட்டுப்பட்டு வாழ வேண்டிய சூழ்நிலை உண்டாகும்.

சந்திரன் உங்கள் ஜாதகத்தில் ஏழாம் இடத்தில் இருந்தால், எதிர்பாலினத்தவர் மீது அதிக பற்று, அக்கறை உண்டாகும். மகிழ்ச்சியான குடும்ப வாழ்க்கை அமையும். எதிர்பாலினத்தவர் மூலம், ஆதாயம் உண்டாகும். சந்திரன் பலம் இல்லாமல் இருந்தால், உடல்நலம் பாதிக்கபடும். மன வாழ்வில், மகிழ்ச்சி குறையும்.

சந்திரன் எட்டாம் இடத்தில் இருந்தால், நல்ல அறிவாற்றம் இருக்கும். ஆயுள் குறைய வாய்ப்புகள் உள்ளன. மனதில் நிம்மதி இருக்காது. ஆனால், எட்டாம் இடத்தில், சந்திரன் நல்ல நிலையில் இருந்தால், நல்ல பண வரவு உண்டாகும். நல்ல செல்வாக்கு உண்டாகும்.

சந்திரன் ஒன்பதாம் இடத்தில் இருந்தால், நல்ல பாக்கியசாலியாக இருப்பர். ஆண் வாரிசு உண்டாகும். உறவினர்களின் ஆதரவு கிடைக்கும். சொத்துக்கள், செல்வம் குவியும். அம்மாவின் மீது, அதிக பாசம் இருக்கும். பூர்வீகச் சொத்துக்கள் கிடைக்கும்.

சந்திரன் பத்தாம் இடத்தில் இருந்தால், மதப் பிரச்சாரம் முதலியவைகளில் ஈடுபடுவர். நல்ல செல்வ வளம் உண்டாகும். நல்ல செயல்களை செய்ய வைப்பார். தொழிலில் வெற்றி மேல் வெற்றி உண்டாகும். தாயின் மூலமும், தாய் வழி உறவினர்கள் மூலம், நல்ல ஆதாயமும், ஆதரவும் உண்டாகும். நல்ல நண்பர்கள் அமைவர். நல்ல அறிவு முதலியவை அமையும். ஒரு சிலருக்கு அரசாங்க வேலயும் அமையும்.

சந்திரன் பதினொன்றாம் இடத்தில் இருந்தால், மூத்த சகோதரர்களின் மூலம், நல்ல லாபத்தினைத் தருவார். இக்கட்டான வேலையைக் கூட, எளிதாக முடிப்பார்கள். வெளிநாட்டுப் பயணங்களின் மீது விருப்பம் உண்டாகும். வெளிநாடுகளுக்கு, சுற்றுலா செல்லும் வாய்ப்புகள் கிடைக்கும்.

சந்திரன் 12ல் இருந்தால், கால் பாதங்களில் வலி உண்டாகும். கண் பார்வை தெளிவாக இருக்காது. மதிப்பில்லாத வாழ்வு அமையும். செலவாழியாக இருப்பார்கள். குறுகிய எண்ணம் உடையவராக, ஜாதகர் இருப்பர்.