அதிசாரக் குருப் பெயர்ச்சியில் இந்த நான்கு ராசிகளுக்கு அதிர்ஷ்டம் தான்!

30 march 2020 ராசிபலன்
gurupeyarchi.jpg

மார்ச் மாதம் நடைபெற உள்ள அதிசாரக் குருப்பெயர்ச்சியில், இருக்கின்ற 12 ராசிகளில், நான்கு ராசிகளுக்கு ராஜயோகப் பலன்கள் நடைபெற உள்ளது. இதனால், பணம், செல்வாக்கு, உடல்நிலை, திருமண வைபவம், சொத்துக்கள் வாங்குதல், குழந்தைப் பிறப்பு முதலியவை உண்டாகும். பழைய கடன்களை அடைத்தல், வராமல் இருந்த பணம் கைக்கு வந்து சேருதல் உள்ளிட்டவைகளும் நடைபெறும்.

மகரம்

உங்கள் ராசியில் தான், நீச்சபங்க ராஜயோகமே உண்டாகின்றது. நூற்றுக்கு 100% உங்களுக்கு நன்மைகள் தான் நடைபெறும். தற்பொழுது ஏழரைச் சனி நடைபெற்றாலும், உங்களுக்கு இந்த நீச்சபங்க ராஜயோகத்தின் காரணமாக, மார்ச் 27 முதல் ஜூலை வரை பல நன்மைகள் நடைபெறும். உங்கள் ராசியில் குரு பகவானும், உங்கள் ராசியதிபதியான சனி பகவானும் இணைந்து இருக்கின்றனர். இதனால், பல நன்மைகள் நடைபெறும்.

உங்கள் ராசியினைச் சேர்ந்தவர்களுக்கு, குழந்தைப் பாக்கியம் உண்டாகும். திருமணத்திற்காக காத்திருந்தவர்களுக்கு, அருமையான வரன் அமையும். வெளியுலகத் தொடர்புகள் சிறப்படையும். உங்கள் கணவன் அல்லது மனைவியின் மூலம் அதிக ஆதாயம் உண்டாகும். உங்கள் தந்தை வழி சொத்துக்கள் உங்களை வந்தடையும். உங்களுடைய பேச்சிற்கு மதிப்பு அதிகரிக்கும். புதிய சொத்துக்களை திடீரென்று வாங்கும் வாய்ப்புகளும் உண்டாகும்.

புதிய எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், செல்போன்கள், டிவிக்கள் முதலியவைகளை வாங்குவீர்கள். ஒரு சிலர் நிலம், வீடு முதலியவைகளை வாங்கும் வாய்ப்புகளும் உண்டாகும். ஒரு சிலர் வாகனம் வாங்கி மகிழ்வீர்கள்.

ரிஷபம்

குரு பகவான் உங்கள் ராசிக்கு ஒன்பதாம் இடத்தில், ஒன்பதாம் இடத்து அதிபதியான சனி பகவானுடன் இணைந்து, நீச்சபங்க ராஜயோகத்தினை அடைந்துள்ளார். இது மாபெரும் வலிமையான அமைப்பாகும். இதனால், உங்கள் ராசிக்கு பலவிதமான ராஜயோகப் பலன்கள் உண்டாகும்.

உங்கள் ராசி, உங்கள் ராசிக்கு மூன்றாம் இடம், ஐந்தாம் இடம் ஆகியவைகளை குரு பகவான் பார்க்கின்றார். அவருடையப் பார்வையானது, பல கோடி நன்மைகளை வழங்கக் கூடியது.

அவருடையப் பார்வையின் காரணமாக, நீங்கள் நினைத்தக் காரியம் கைகூடும். இதுவரை தடைப்பட்டு வந்த வருமானம், மொத்தமாக வந்து சேரும். உங்கள் முகத்தில் பொலிவு கூடும். தெளிவாக செயல்படுவீர்கள். உங்கள் இளைய சகோதரரின் ஆதரவு, உங்களுக்கு முழுமையாகக் கிடைக்கும். பண வரவுக்கும் பஞ்சம் இருக்காது. ஆன்லைன் வர்த்தகம் சிறப்படையும். அண்டை அயலாருடன் இருந்து வந்த மனக்கசப்பு நீங்கும்.

ஆன்லைன் தொழிலில் நல்ல வளர்ச்சி உண்டாகும். இளைய சகோதர, சகோதரிகளின் மூலம் ஆதாயம் உண்டாகும். உங்களுடைய நீண்ட நாள் ஏக்கமான குழந்தைப் பாக்கியமும் உண்டாகும். உங்களுடைய ஒருதலைக் காதலும் கைக் கூடும். பூர்வீகச் சொத்துக்களில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். இந்த காலக் கட்டத்தில் குழந்தைகள் பிறந்தால், ட்வின்ஸாக இருப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. உங்கள் முன்னோர்களின் சொத்துக்கள் உங்களை வந்தடையும். இந்த அதிசாரக் குருப் பெயர்ச்சியில், நூற்றுக்கு நூற்று சதவிகிதம் நன்மையே நடக்கும்.

கடகம்

கடக ராசியினை சனி பகவானும், குரு பகவானும் இணைந்து பார்க்கின்றனர். இதனால், நீங்கள் நீண்ட காலமாக தீட்டி வைத்தும், செயல்படுத்த முடியாமல் இருந்து வந்தத் திட்டங்கள் அனைத்தும் இந்தக் காலக் கட்டத்தில் நிறைவேறும். மனதில் புதிய தெளிவு உண்டாகும். உங்கள் ராசி, உங்கள் ராசிக்கு மூன்றாம் இடம், மற்றும் 11ம் இடத்தினை குரு பகவான் பார்க்கின்றார். அவர் உங்கள் ராசிக்கு ஏழாம் இடத்தில், சனி பகவானுடன் இணைந்து, நீச்சபங்க இராஜ யோகத்தினை உண்டாக்குகின்றார்.

இதனால் திருமணமாகாதவர்களுக்கு, அழகிய வரன்கள் அமையும். பிரிந்திருந்த கணவன் மற்றும் மனைவி ஒன்று சேர்வர். தம்பதிகளுக்கு இடையில் இருந்து வந்த பிரச்சனைகள், பனி போல் மறையும். தொழில்முறைக் கூட்டாளிகளுடன் இருந்து வந்தப் பிரச்சனைகள் நீங்கி, மிகவும் இணக்கமாக காணப்படுவீர்கள்.

வெளியுலகத் தொடர்பு சிறப்பாக இருக்கும். தொழிலில் இருந்து வராமல் இருந்து வந்த வருமானம், இந்தக் காலக் கட்டத்தில் நல்ல விதத்தில் வந்து சேரும். மூத்த சகோதரரின் ஆதரவு கிடைக்கும். பெரிய இடத்து மனிதர்களின் நட்பு கிடைக்கும். உங்களுடைய எண்ணங்கள் ஈடேறும். இளைய சகோதரர்கள் உங்களுடைய வெற்றிக்கு, உறுதுணையாக இருப்பர். ஆன்லைன் வர்த்தகம் சிறப்படையும். உடலில் வீரியம் அதிகரிக்கும். உடல்வலிமைக் கூடும்.

கன்னி

இந்த காலக் கட்டத்தில், உங்கள் ராசிக்கு நூற்றுக்கு நூறு சதவிகிதம் நன்மைகள் மட்டுமே நடக்க உள்ளது. உங்கள் ராசிக்கு ஐந்தாம் அதிபதியான சனி பகவான், ஐந்தாம் இடத்தில் ஆட்சியில் இருக்கின்றார். அதுமட்டுமின்றி, குரு பகவான் உங்கள் ராசிக்கு ஐந்தாம் இடத்திற்குப் பெயர்ச்சி அடைந்து, நீச்சம் அடைகின்றார். ஐந்தாம் இடத்து அதிபதியுடன் இணைந்து இருப்பதனால், நீச்சபங்கம் அடைந்து, நீச்சபங்க ராஜயோகத்தினை வழங்க உள்ளார்.

இந்தக் காலக் கட்டம், உங்கள் ராசிக்குப் பொற்காலம் தான். தொட்டதெல்லாம் துலங்கும். பேச்சில் இனிமைத் தெரியும். குழந்தை இல்லாத கன்னி ராசி அன்பர்களுக்கு, நல்ல அழகியக் குழந்தைகள் பிறக்கும். பெண் குழந்தைகள் பிறப்பதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. புதிய சொத்துக்களை வாங்கும் பாக்கியமும் உண்டாகும். படிப்பில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.

கலைத் துறையில் இருப்பவர்கள் சிறப்படைவர். தொழிலில் இருந்து வரும் வருமானம் நன்றாக இருக்கும். விரும்பிய பதவி உயர்வு, பணியிட மாற்றம் முதலியவை உண்டாகும். வராமல் இருந்த வருமான், வரும்.

குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். முகத்தில் வசீகரம் அதிகரிக்கும். பேச்சில் இனிமைத் தெரியும். பண வரவு நிம்மதி அளிக்கும். நல்ல சுவையான உணவுகள் கிடைக்கும். மூத்த சகோதரர்கள் உங்களுக்கு உதவிகரமாக இருப்பர். இரண்டாவது மனைவியின் மூலம், நன்மைகள் ஏற்படும். மறுமணத்திற்காக காத்திருந்தவர்களுக்கு நல்ல விதத்தில் திருமணம் நடைபெறும். மொத்தத்தில் நூற்றுக்கு நூறு சதவிகிதம் உங்கள் ராசிக்கு நன்மைகள் நடைபெறும்.