மதுரையில் உள்ள ஸ்ரீ கள்ளழகர் திருக்கோவில் வழக்கினை இன்று மதுரையில் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை விசாரித்தது. அதில் பல கட்டுப்பாடுகளை நீதிமன்றம் விதித்துள்ளது.
மதுரைக் கள்ளழகர் கோவில் 108 விஷ்ணு திவ்யப் பிரதேசங்களில் மிக முக்கியமான திருத்தலமாகும். இங்கு உள்ள பெருமாள் உலகளவில் பிரசித்திப் பெற்றவர். இந்தக் கோவில் அழகர் மலையில் அமைந்துள்ளது. இந்த மலையில், பல உயிரினங்களும், மரங்களும் உள்ளன. மலை என்பதால், காவல் துறையால் முழுமையான கண்காணிப்பை தர இயலவில்லை. இதனால், கொலை, கொள்ளை போன்றவைகளில் ஈடுபட்டவர்கள் இந்த மலைக்குள் சென்றுப் பதுங்கி விடுகின்றனர். மேலும், இளைஞர்கள் பெண்களுடன் தகாத செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.
இதனை கண்டித்த நீதிபதி, அழகர் கோவிலில் உள்ள முக்கியப் பகுதிகளில் சிசிடிவி கேமிராக்களைப் பொருத்தி கண்காணிக்க உத்தரவிட்டுள்ளார். மேலும், அழகர் கோவிலின் சொத்துக்களைப் பற்றிய உண்மையானக் கணக்குகளை சமர்பிக்கவும் உத்தரவிட்டுள்ளார்.
சித்திரைத் திருவிழா அன்று, அழகர் அவருடைய மண்டகப் படிகளில் எழுந்தருளுவார். அத்தகைய மண்டகப் படிகள் எத்தனை உள்ளன என்றும், அழகர் கோவிலின் சொத்துக்களை யார் யார் ஆக்கிரமித்துள்ளார்கள் என்பதைப் பற்றியும் உடனடியாக கணக்கெடுத்து, சமர்பிக்கும்படியும் உத்தரவிட்டுள்ளது உயர்நீதிமன்றம்.