24 October 2019 கோவில்கள்
alagar-chithirai-festival.jpg

இன்று காலை 6.00 மணி அளவில், உலக பிரசித்திப் பெற்ற, மதுரை கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளினார்.

சித்திரைத் திருவிழா மதுரையில் கோலாகலமாகக் கொண்டாடப்படுவது வழக்கம். மீனாட்சி-சுந்தரேஷ்வரர் திருமணம், திருத்தேரோட்டம், மீனாட்சி பூப்பல்லாக்கு, கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளல் என, மதுரையே இந்த சித்திரை மாதம் முழுக்க, திருவிழா கோலம் பூண்டிருக்கும்.

alagar-chithirai-festival1

அந்த வகையில், இன்று காலை 5.45 மணி அளவில் அழகர் மலையில் கோயில் கொண்டுள்ள, சுந்தர் ராஜ பெருமாள், கள்ளர் கொண்டை அணிந்து, ஆயுதங்களுடன் தங்கக் குதிரை மீது ஏறி, மதுரையில் உள்ள, வைகை ஆற்றில் எழுந்தருளினார். முன்னதாக, தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாசலபதி கோவிலில், சுந்தர் ராஜப் பெருமாளுக்கு அபிஷேகமும், சிறப்புப் பூஜையும் நடைபெற்றது.

பின்னர், தங்கப்பல்லாக்கில் இருந்து, தங்கக் குதிரைக்கு மாறிய கள்ளழகர், மதுரையில் அமைகப்பட்டுள்ள பக்தர்களின் மண்டகப் படிகளில் எழுந்தருளினார். சுமார் 445 மண்டகப் படிகளில் எழுந்தருளிய கள்ளழகர், காலையில் 6.00 அளவில், பச்சை நிறப்பட்டினை உடுத்தி, வைகை ஆற்றில், பக்தர்களின் கோவிந்தா! கோவிந்தா! என்ற கோஷம் விண்ணை முட்ட, எழுந்தருளினார்.

அவரை மதுரை வீரராகவப் பெருமாள் வரவேற்று முன்னதாகவே ஆற்றுக்கு வந்தார். 7.25 வரை வைகை ஆற்றில் இருந்த கள்ளழகர் பின், தீர்த்தவாரி நிகழச்சிக்காக, வைகை ஆற்றில் இருந்து பிரியா விடைப்பெற்றர்.