இன்று ஆடி கிருத்திகை! முருகன் கோவிலில் விஷேச வழிபாடு!

24 October 2019 சாஸ்திரம்
pariharam.jpg

இன்று ஆடி கிருத்திகையை விரதத்தை முன்னிட்டு, தமிழகத்தில் உள்ள அனைத்து முருகன் கோவிலும் விஷேச வழிபாடுகள், பூஜைகள் நடைபெறுகின்றன.

தமிழகத்தில் உள்ளவர்கள் தமிழ் கடவுளாக முருகனை வணங்கி வருகின்றனர். இந்நிலையில், தைப் பூசம், கார்த்திகை தீபம், ஆடி கிருத்திகை உட்பட பல நாட்களில், முருகன் கோவிலுக்குச் சென்று, தங்களுடைய வேண்டுதலையும், வழிபாடுகளையும் செய்கின்றனர்.

முருகனின் அறுபடை வீடுகளில் மட்டுமின்றி, அனைத்து முருகன் கோவிலிலும் விஷேச வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. பக்தர்கள், பால் காவடி, பால் குடம், காவடி, வேல் குத்தி கோவிலுக்கு நடைபயணமாக சென்று முருகனை வழிபாடு செய்து வருகின்றனர்.

இருப்பதிலேயே, முருகனை வழிபடும் முறையான கௌமாரமே, சற்றுக் கடினமான ஒன்றாக ஆன்மீகவாதிகளால் கருதப்படுகிறது. அதே சமயம், முருகனைப் போல் உடனடிப் பலனை யாரும் தருவதில்லை என, அவருடையப் பக்தர்கள் கருதுகின்றனர். இதனாலயே பக்தர்கள் கஷ்டத்தைப் பொருட்படுத்தாமல், தங்களுடைய பக்தியை வெளிப்படுத்துகின்றனர்.