சூரியன் 108 போற்றி!

24 October 2019 மந்திரம்
suriyan.jpg 1.ஓம் அதிதி புத்ரனே போற்றி!
2.ஓம் அளத்தற்கரியனே போற்றி!
3.ஓம் அறுகுப்பிரியனே போற்றி!
4.ஓம் அருணன் சோதரனே போற்றி!
5.ஓம் அகந்தை அழிப்பவனே போற்றி!
6.ஓம் அக்கினி அதிதேவதையே போற்றி!
7.ஓம் ஆண் கிரகமே போற்றி!
8.ஓம் ஆதிவார நாதனே போற்றி!
9.ஓம் ஆய்வின் இலக்கே போற்றி!
10.ஓம் ஆறாண்டு ஆள்பவனே போற்றி!
11.ஓம் ஆன்மாவே போற்றி!
12.ஓம் ஆதித்யஹ்ருதய ப்ரியனே போற்றி!
13.ஓம் இருள் நீக்கியே போற்றி!
14.ஓம் இயக்க சக்தியே போற்றி!
15.ஓம் ஈசன் வலக்கண்ணே போற்றி!
16.ஓம் உக்கிரனே போற்றி!
17.ஓம் உஷா நாதனே போற்றி!
18.ஓம் உவமைப் பொருளே போற்றி!
19.ஓம் உயிர்களின் வாழ்வே போற்றி!
20.ஒம் உத்திரநாதனே போற்றி!
21.ஓம் உத்திரட்டாதிபதியே போற்றி!
22.ஓம் என்பானவனே போற்றி!
23.ஓம் எருக்கு சமித்தனே போற்றி!
24.ஓம் எழுபரித் தேரனே போற்றி!
25.ஓம் எண்ணெழுத்து மந்திரனே போற்றி!
26.ஓம் எங்கும் நிறைந்தவனே போற்றி!
27.ஓம் ஏற்றமளிப்பவனே போற்றி!
28.ஓம் ஒளிப்பிழம்பே போற்றி!
29.ஓம் ஓராழித்தேரனே போற்றி!
30.ஓம் ஓய்விலானே போற்றி!
31.ஓம் ஓங்காரம் துதித்தவனே போற்றி!
32.ஓம் கதிரவனே போற்றி!
33.ஓம் கண்கண்ட தெய்வமே போற்றி!
34.ஓம் களங்கமிலானே போற்றி!
35.ஓம் கமலம் விரிப்பவனே போற்றி!
36.ஓம் கர்ணன் தந்தையே போற்றி!
37.ஓம் கனலே போற்றி!
38.ஓம் கண்ணின் காவலே போற்றி!
39.ஓம் கற்பரசிச் சேவகனே போற்றி!
40.ஓம் கண்டியூரில் அருள்பவனே போற்றி!
41.ஓம் காஷ்யபர் மைந்தனே போற்றி!
42.ஓம் காயத்ரி தேவனே போற்றி!
43.ஓம் கார்ப்புச் சுவையனே போற்றி!
44.ஓம் காலக் கணக்கே போற்றி!
45.ஓம் காய்பவனே போற்றி!
46.ஓம் காலை மாலை கனிவோனே போற்றி!
47.ஓம் கிழக்கு நோக்கனே போற்றி!
48.ஓம் கிருத்திகை அதிபதியே போற்றி!
49.ஓம் கிரக நாயகனே போற்றி!
50.ஓம் கிருபாகரனே போற்றி!
51.ஓம் குந்திக்கருளியவனே போற்றி!
52.ஓம் குறை தீர்ப்பவனே போற்றி!
53.ஓம் கோதுமைப்பிரியனே போற்றி!
54.ஓம் கோனார்க்கில் அருள்பவனே போற்றி!
55.ஓம் ஞாயிறே போற்றி!
56.ஓம் ஞாலக் காவலே போற்றி!
57.ஓம் சனீஸ்வரன் தந்தையே போற்றி!
58.ஓம் சங்கராந்தி நாயகனே போற்றி!
59.ஓம் சாட்சித் தேவனே போற்றி!
60.ஓம் சமரிலானே போற்றி!
61.ஓம் சிங்கக் கொடியனே போற்றி!
62.ஓம் சிம்மராசி அதிபதியே போற்றி!
63.ஓம் சிரஞ்சீவியே போற்றி!
64.ஓம் சிதம்பரத்தாலயமுளானே போற்றி!
65.ஓம் சுயம்பிரகாசனே போற்றி!
66.ஓம் சூர்ய நமஸ்காரப்பிரியனே போற்றி!
67.ஓம் சூரியனார் கோயில் தேவனே போற்றி!
68.ஓம் செம்மேனியனே போற்றி!
69.ஓம் செம்மலர்ப்பிரியனே போற்றி!
70.ஓம் செந்நிறக்குடையனே போற்றி!
71.ஓம் செந்தாமரை ஏந்தியவனே போற்றி!
72.ஓம் சூலாயுதனே போற்றி!
73.ஓம் சோழர் மூதாதையனே போற்றி!
74.ஓம் சவுர மதத் தலைவனே போற்றி!
75.ஓம் தனிக்கோயிலுளானே போற்றி!
76.ஓம் தாமிர உலோகனே போற்றி!
77.ஓம் தூயவனே போற்றி!
78.ஓம் திருமேய்ச்சூரில் அருள்பவனே போற்றி!
79.ஓம் நடுவிருப்போனே போற்றி!
80.ஓம் நன்னிலத்து அருள்பவனே போற்றி!
81.ஓம் நலமே அளிப்பவனே போற்றி!
82.ஓம் நளாயினிக்கு அருளியவனே போற்றி!
83.ஓம் நல்லுலகத் தந்தையே போற்றி!
84.ஓம் நாடப்படுபவனே போற்றி!
85.ஓம் நீதிதேவனே போற்றி!
86.ஓம் நோய் தீர்ப்பவனே போற்றி!
87.ஓம் பகற்காரணனே போற்றி!
88.ஓம் பனையபுரத்து அருள்பவனே போற்றி!
89.ஓம் பரஞ்சோதியே போற்றி!
90.ஓம் பரிட்சித்துக்கு அருளியவனே போற்றி!
91.ஓம் பாலைநிலத்தேவனே போற்றி!
92.ஓம் பிரபாகரனே போற்றி!
93.ஓம் புகழ்வாய்த்தவனே போற்றி!
94.ஓம் புத்தியளிப்பவனே போற்றி!
95.ஓம் மல நாசகனே போற்றி!
96.ஓம் மதி ஒளிரச் செய்பவனே போற்றி!
97.ஓம் மயில்வாகனனே போற்றி!
98.ஓம் மயூரகவிக்கு அருளியவனே போற்றி!
99.ஓம் முதல் கிரகமே போற்றி!
100.ஓம் முக்கோணக் கோலனே போற்றி!
101.ஓம் முழுமுதற் பொருளே போற்றி!
102.ஓம் மும்மூர்த்தி அம்சமே போற்றி!
103.ஓம் ரவிக்குலத்தலைவனே போற்றி!
104.ஓம் ருத்ரன் பிரத்யதி தேவதையே போற்றி!
105.ஓம் விடியச் செய்பவனே போற்றி!
106.ஓம் வலிவலத்து அருள்பவனே போற்றி!
107.ஓம் "ஹரீம்' பீஜ மந்திரனே போற்றி!
108.ஓம் சூரியநாராயணனே போற்றி!